உயிருக்கு குறி வைக்கும் தலிபான்கள்... ஆப்கானிஸ்தான் இந்து கோயில் அச்சகர் ராஜ்குமார் பிடிவாதம்..!
இந்து கோயிலின் அர்ச்சகர், தனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சேவையாற்றியுள்ளனர். அதை கைவிடப்போவதில்லை. தலிபான்கள் கொன்றாலும் அதனை சேவையாகவே கருதுவேன் என தெரிவித்து உள்ளார் அர்ச்சகர் ராஜ்குமார்.
தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, அமைதிக்கு உறுதியளித்து, பெண்களின் உரிமைகளை மதிக்கப் போவதாகக் கூறினார்கள், ஆனால் அங்கு நிலைமை வேறாக உள்ளாது.
காபூலில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், தலிபான் போராளிகள் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிக்க கூர்மையான பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். விமான நிலையத்திலிருந்து கூட்டத்தை திருப்பி அனுப்ப தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியது வீடியோக்களாக பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள இந்து கோயிலின் அர்ச்சகர், தனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சேவையாற்றியுள்ளனர். அதை கைவிடப்போவதில்லை. தலிபான்கள் கொன்றாலும் அதனை சேவையாகவே கருதுவேன் என தெரிவித்து உள்ளார் அர்ச்சகர் ராஜ்குமார்.
காபூலில் உள்ள ரத்தன்நாத் கோயில் அர்ச்சகராக உள்ள ராஜேஷ் குமார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''எனது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக சேவையாற்றிய கோயிலை விட்டு நான் வெளியேற மாட்டேன். நான் கோயிலை கைவிட மாட்டேன். தலிபான்கள் என்னை கொன்றாலும், அதை சேவையாகவே கருதுவேன். தங்களுடன் வரும்படி ஏராளமான பக்தர்கள் மற்றும் இந்துக்கள் என்னை கேட்டனர். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை'' என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.