தேவையில்லாமல் இந்தியாவை வம்பிழுக்கும் தலிபான்கள்.. 150 இந்தியர்களை சிறை பிடித்து வைத்துள்ளதாக தகவல்.
இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்துவதை தவிர்த்து, ஈரான் சென்று அங்கிருந்து மாற்று வழியில் இந்திய விமானங்கள் நாடு திரும்பி வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் காத்திருந்தபோது தலிபான்கள் அவர்களை கடத்திச் சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறியதை தொடர்ந்து ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.இது அந்நாட்டின் ஒட்டுமொத்த சூழலையும் தலைகீழாக மாற்றி உள்ளது.
காபுல் நகரத்தை தலிபான்கள் நெருங்கியதை அறிந்த முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். இதனால் தலிபான்களிடம் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது. தலிபான்கள் ஆட்சியின்கீழ் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் அந்நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் காபுல் உள்ளிட்ட நான்கு இடங்களில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை மூடுவதாக, மத்திய அரசு அறிவித்தது. அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய தூதர் மற்றும் அனைத்து தூதரக அதிகாரிகளும் ஊழியர்களும் உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டது. இந்திய தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன.
இதுவரை 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்துவதை தவிர்த்து, ஈரான் சென்று அங்கிருந்து மாற்று வழியில் இந்திய விமானங்கள் நாடு திரும்பி வருகின்றன.நிலையில் ஆப்கனிஸ்தான் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு மீட்பில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதே நேரத்தில் ஏராளமான இந்தியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து நாடு திரும்ப போராடி வருகின்றனர். நாடு திரும்ப காபுல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 150 பேரை தலிபான்கள் தடீரென கடத்தியதாக தகவல் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இந்தியர்கள் வெளியேறுவதற்கு தாலிபன்கள் இசைவு தெரிவிக்க மறுத்து வந்த நிலையில் இந்தியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.