பப்ஜி, டிக் டாக் செயலிகளுக்கு தடை..! PUBG ரசிகர்கள் அதிர்ச்சி !!
இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூன் மாதம், 2020ம் ஆண்டு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. அதனை தொடர்ந்து பப்ஜி செயலியையும் தடை செய்தது.
பப்ஜிக்கு தடை :
சிறியவர் முதல் பெரியவர் வரை பப்ஜி கேமுக்கு அடிமையான இந்தியர்கள் ஏராளம். சாப்பிடுவதைக் கூட மறந்து பப்ஜி விளையாட்டில் மூழ்கிக் கிடக்கும் தங்களது குழந்தைகள் மீது பெற்றோருக்கு அதிக கவலை இருந்தது. 2022ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, வீட்டிலேயே முடங்கிக் கிடந்த பப்ஜி கேமர்கள் 24 மணி நேரமும் பப்ஜி விளையாடினர். அதேநேரத்தில் இந்தியா - சீனா எல்லைப் பிரச்சினையைத் தொடர்ந்து இந்தியாவில் சீன மொபைல் ஆப்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டது. அதில் பப்ஜியும் ஒன்று.
டிக்டாக் தடை :
மேலும், இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் யூசர்களை கொண்டிருந்த டிக்டாக் செயலிக்கு, இது பெரும் இழப்பாக அமைந்தாலும், உலக அளவில் இதுவரை டிக்டாக்கின் மவுசு சிறிதும் குறையவில்லை. சீன நிறுவனத்தை சேர்ந்த டிக்டாக் 2020ம் ஆண்டு முதல் உலகிலேயே அதிக அளவில் பயன்படுத்தப்படும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் ஆப் ஆக உள்ளதாக சென்சார் டவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, சீனாவில் டூயின்( Douyin) என அழைக்கப்படும் டிக்டாக், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டும் கேம் அல்லாத பயன்பாடாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது. அதேபோல் கூகுள் ப்ளே ஸ்டோரில், கிட்டத்தட்ட 250 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் அதிக வருவாய் ஈட்டும் முதல் ஆப் ஆக கூகுள் ஒன் உள்ளது. டிக்டாக் இந்த காலாண்டில் மட்டும் ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் உள்ள யூஸர்கள் மூலமாக 821 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தலிபான்கள் தடை :
இந்த நிலையில், தற்போது பொழுதுபோக்கு அடக்குமுறை என்று கூறப்படும் வகையில் டிக் டாக் மற்றும் பப்ஜி ஆகிய செயலிகளுக்கு தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. இளைஞர்கள் வழிதவறி செல்லும் வகையில் இந்த செயலிகளின் பயன்பாடு இருப்பதாக கூறி தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் பொழுது போக்கு அம்சங்கள் பலவற்றிற்கு தலிபான்கள் தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.