Asianet News TamilAsianet News Tamil

MeToo புகாரில் யூ டூ கூகுள்...? 13 பேர் மேனேஜர்கள் உட்பட 48 பேர் மேல் பாலியல் பஞ்சாயத்து

யூ டூ கூகுள் என்று சற்றே அதிர்ச்சி அடையவேண்டிய அளவுக்கு, மி டு’ பாலியல் புகாரில்  கூகுள் நிறுவனத்தைச்சேர்ந்த 48 பேருக்கும் மேல் சிக்கி வேலையை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

sunder pichai,google,13 senier staff
Author
Washington, First Published Oct 26, 2018, 3:35 PM IST

யூ டூ கூகுள் என்று சற்றே அதிர்ச்சி அடையவேண்டிய அளவுக்கு, மி டு’ பாலியல் புகாரில்  கூகுள் நிறுவனத்தைச்சேர்ந்த 48 பேருக்கும் மேல் சிக்கி வேலையை விட்டுத் தூக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

sunder pichai,google,13 senier staff

கூகுள் நிறுவனமும் பாலியல் தொலைகளிலிருந்து தப்பவில்லை.  அந்நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயர் பதவியில் இருந்த 13 மேனேஜர்கள் உட்பட 48க்கும் மேற்பட்டவர்கள் உடன்பணி செய்யும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேலையைவிட்டு தூக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த செய்தியை கூகுளின் தலைவர் சுந்தர் பிச்சையும் உறுதி செய்துள்ளார்.

கூகுளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் புகார்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. பணியாளர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்த பாலியல் புகார்கள்  காரணமாக இதுவரை 48 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் மூத்த மேனேஜர்கள் மற்றும் அதற்கு மேல் பதவியில் இருப்பவர்கள் ஆவர். இவர்கள் யாருக்கும் பணிக்கொடை ஏதும் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

sunder pichai,google,13 senier staff

அதே சமயம் 2014 ம் ஆண்டு பாலியல் புகார் காரணமாக , கூகுளின் ஆன்டிராய்டு மொபைல் சிஸ்டத்தை உருவாக்கிய ஆன்டி ரூபின் வெளியேற்றப்படும் போது அவருக்கு 90 மில்லியன் டாலர்கள் பணிக்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்து சுந்தர் பிச்சை விளக்கம் எதுவும் கொடுக்கவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios