உடல் பருமனானவர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா..!! தடுப்பூசி கண்டு பிடித்தாலும் பலன் இருக்காதாம்..!!

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸால் ஆபத்து அதிகம் என பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் பருமனாக உள்ளவர்கள் குறித்து இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Such a danger for obese people, Even if the vaccine is found, it will not be effective

உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸால் ஆபத்து அதிகம் என பல ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் பருமனாக உள்ளவர்கள் குறித்து இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  ஒரு புதிய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டாலும்கூட அது அதிக உடல் எடை அல்லது கொழுப்பு நிறைந்தவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பலன் கொடுக்காது என சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல முந்தைய ஆய்வுகள் இன்புளூயன்சா மற்றும் ஹெபடைடிஸ்-பி தடுப்பூசி பருமனானவர்களுக்கு குறைந்த அளவிலேயே செயலாற்றும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள் விரைவாக நோய்வாய்ப்பட்டு பல சிக்கல்களை சந்திக்க நேரிடும், சில சமயங்களில் பல உறுப்புகள் வேலை செய்யாமல்கூட போகவும், சில நேரங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கும். என தெரிவிக்கப்படுகிறது. மே17 ஆய்வின்படி ஹெப்படைடிஸ்-பி தடுப்பூசி மெலிந்த தேகம் உடையவர்கள் உடன் ஒப்பிடுகையில் பருமனானவர்களில்  அதன் செயல்பாடு குறைவாக இருப்பதாகவே கண்டறியப்பட்டுள்ளது. 

Such a danger for obese people, Even if the vaccine is found, it will not be effective

பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில்  உயிர் வேதியியல் பேராசிரியர் டாக்டர் சாட்  பெட்டிட் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் தடுப்பூசி பருமனானவர்களுக்கு, வேலை செய்யாது என்பது அல்ல, ஆனால்  பருமனானவர்களுக்கு இது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்வி? இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இந்தத் தடுப்பூசி பருமனானவர்களுக்கு வேலை செய்யும் ஆனால் அது பயனுள்ளதாக இருக்காது எனக் கூறியுள்ளார்.  அமெரிக்கநோய்க் கட்டுப்பாடு மற்றும்  தடுப்பு மையத்தின் கூற்றுப்படி, இங்குள்ள பெரியவர்களில் சுமார் 42.4 சதவீதம் பேர் பருமனானவர்கள், அதில்  சிறுவர்களில் 18.5 சதவீதம் பேர் உள்ளனர். டைப்-2 நீரிழிவு, பக்கவாதம், மாரடைப்பு மற்றும் சில புற்று நோய்களுக்கு உடல்பருமன் ஆபத்தானது என்று கருதப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் உடல் பருமன் குறித்து புகார் தெரிவிக்கின்றனர்,  பருமனான பெரியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

Such a danger for obese people, Even if the vaccine is found, it will not be effective

குறிப்பாக அதிக எடை கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது, உடல் பருமன் காரணமாக அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அவர்களால் வைரசை சரியாக எதிர்த்துப் போராட முடியாமல் போகிறது. கடந்த காலங்களில் சில பருமனானவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும், அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தே காணப்பட்டது. பருமனானவர்களுக்கு தடுப்பூசி உட்செலுத்துதலின் அளவு முக்கியமானது என வாட்டர் பில்டர் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் தொற்று நோய்களின் பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஷெஃப்னர், கூறுகிறார்.  வழக்கமாக 1 அங்குல ஊசி தடுப்பூசியில் பயன்படுத்தப்படுகிறது, இது அதிக எடை கொண்டவர்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. நீண்ட ஊசிகள் செலுத்தினால் அது வேலை செய்கின்றன. மருத்துவர்கள் ஊசியின் நீளம் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும், நீங்கள் இன்ட்ராமஸ்குலர் கொடுக்கிறீர்கள் என்றால் அது உண்மையில் தசையை அடைய வேண்டும் என ஷெஃப்னர் வலுயுறுத்தியுள்ளார்...  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios