Russia Ukraine War: உக்ரைன் - ரஷ்யா மோதல்..தொடந்து குண்டு மழை..காயமடைந்த இந்திய மாணவன் தற்போதைய நிலை..?

Russia Ukraine War:உக்ரைனின் கீவ் நகரில் நடத்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமுற்ற இந்திய மாணவன் விரைவில் தாயகம் திரும்ப உள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Student injured in a bomb blast in Kiev

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. தொடர்ச்சியாக முக்கிய நகரங்களை ரஷ்ய படை கைப்பற்றி வருகின்றன. தொடந்து குண்டு மழைகளை ரஷ்ய இராணுவம் பொழிந்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் பல பகுதிகள் கடும் சேதமடைந்துள்ளது. மேலும் இரு தரப்பிலும் பல உயிர்கள் பலியாகியுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையிலான இந்த சண்டையால் 11 நாட்களில் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். போலந்து, ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் காரணமாக பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா இரு நாடுகளும் இடையே, நடத்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், மனிதாபிமான அடிப்படையில் உதவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி வோல்னோவாகா, மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில் தற்காலிக போர் நிறுத்ததை ரஷ்யா அறிவித்தது.ஆனால் அது தோல்வியடைந்ததாக கூறி, தற்போது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க: Russia Ukraine War: அணு ஆயுத போராக உருமாறுமா..? பிரான்ஸ் அதிபருடன் 1.45 மணி நேரம் பேசிய ரஷ்ய அதிபர் புதின்..

அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் தரை வழியாக அண்டை நாடுகளான ரூமேனியா, ஹங்கேரி, போலந்து  மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளுக்கு அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டு வருகின்றனர். இதுவரை 60 க்கும் மேற்பட்ட விமானங்களில் 16,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் டெல்லி அருகே உள்ள சத்தர்பூரை சேர்ந்த ஹர்ஜோத் சிங் என்ற அந்த மாணவர் கீவ் நகரில் தங்கி படித்து வந்துள்ளார்.தனது நண்பர்களுடன் கீவ் பகுதியில் இருந்து லிவிவ் நகருக்கு ஒரு காரில் சென்ற போது அவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதனிடையே உக்ரைனின் கீவ்வில் துப்பாக்கியால் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத்சிங் போலந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: Russia Ukraine War: தண்ணீர், உணவு கிடைக்கல..5 நாட்கள் பாதாளத்தில் இருந்தோம்.. மீண்ட தமிழ் மாணவர்கள் பகீர்..

மேலும் போலந்து எல்லையில் இந்திய தூதர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனிடயே, குண்டு பாய்ந்த காயமடைந்த அவர், நாளை தாயகம் திரும்புவார் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி பேட்டி கொடுத்த அந்த மாணவன், எனது தோள்ப்பட்டையிலிருந்து, மார்ப்பிலிருந்தும் மருத்துவர்கள் தோட்டாவை வெளியே எடுத்துள்ளனர். மேலும் குண்டு தாக்குதலில் எனது கால் முறிந்தது என்று கூறினார். முன்னதாக கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் கர்நாடகத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios