மகிந்த ராஜபக்ச ராஜினாமா? அரசிலிருந்து 14 எம்.பிக்கள் விலகல்… இலங்கையில் பதற்றம்!!

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார்.

srilanka pm mahinda rajapaksa resign his post

பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க சீனா, இந்தியா போன்ற நாடுகளிடம் இலங்கை கூடுதலாகக் கடன் கேட்டுள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக பால், சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன.

srilanka pm mahinda rajapaksa resign his post

இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

srilanka pm mahinda rajapaksa resign his post

மேலும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார். இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளார். இதை அடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சாவிடம் மகிந்த ராஜபக்ச வழங்கினார். மகிந்த ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க இலங்கை அதிபர் கோட்டாபய ராஜப்க்சா மறுப்பு தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி இலங்கை அரசிலிருந்து விலகுவதாக சுதந்திர கட்சியை சேர்ந்த 14 எம்.பிக்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios