இலங்கை அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று நள்ளிரவில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனாவும், ராஜபக்சேவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, ரணிலை ஒரே நாளில் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்ட சிறிசேனா, ராஜபக்சேவை பிரதமராக்கினார். ஆனால் இலங்கை பிரதமர் நானே என்று ரணில் அறிவித்துக் கொண்டார்

இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிபர் சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தார். இந்நிலையில், அந்நாட்டுநாடாளுமன்றம்வரும் 14-ஆம்தேதிகூடுவதாகஅதிபர்மைத்ரிபாலசிறீசேனாகடந்த ஞாயிற்றுக்கிழமைஅறிவித்தார்.
நாடாளுமன்றம் கூடஉள்ள நிலையில் ரணிலும், ராஜபக்சேவும் தங்கள் பெரும்பான்னைமயை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 225 எம்.பி.க்களைகொண்டஇலங்கைநாடாளுமன்றத்தில்பெரும்பான்மையைநிரூபிக்க 113 பேரின்ஆதரவுதேவைஎன்றநிலையில்ராஜபக்சேவின்அணியில் 100 பேர்மட்டுமேஇருக்கின்றனர்.
பிரதமர்பதவியில்இருந்துநீக்கப்பட்டரணில்விக்ரமசிங்கேவை 103 எம்.பி.க்கள்ஆதரிக்கின்றனர். இச்சூழலில்தமிழ்தேசியக்கூட்டமைப்பைச்சேர்ந்த 16 பேர், இடதுசாரிகளின்மக்கள்விடுதலைமுன்னணியைச்சேர்ந்த (ஜேவிபி) 6 பேர்இலங்கைநாடாளுமன்றத்தில்எம்.பி.க்களாகஉள்ளனர். இவர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிகிறது.
இதனால் ராஜபக்சே தோற்றுப் போக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொழும்பில்செய்தியாளர்களிடம்பேசியஐக்கியதேசியகட்சியின்எம்பிஅஜித்பீபெரேரா , இன்றிரவு இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறினார்.

நாடாளுமன்றம்சென்றபோது, இந்ததகவல்தமக்குகிடைத்தாகஅவர்கூறினார். ஐக்கியதேசியகட்சியின்அஜீத்பீபெரேராவெளியிட்டஇந்ததகவல்இலங்கையில்பெரும்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது. ரணில் விக்கிரசிங்கேவை மீண்டும் பிரதமர் ஆக விடாமல் தடுக்க சிறிசேனாவும், ராஜபக்சேவும் சதி செய்து வருவதாக தெரிகிறது.
