இலங்கையிலுள்ள முக்கிய சர்ச்சுகளில் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று 10 நாள்களுக்கு முன்பாகவே அந்நாட்டின் மூத்த காவல்துறை அதிகாரி எச்சரிக்கைவிடுத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று இலங்கையின் கொழும்பு பகுதியிலுள்ள முக்கிய  குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 207 பேராவது உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல் துறை தெரிவித்துள்ளது. தாக்குதலில் 450 பேர் படுகாயமடைந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மீண்டும் பின்னர், மதியம் 2 மணி அளவிலும், 3 மணி அளவிலும் மேலும் இரண்டு குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.


 
இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் பலியானோரில் சுமார் 35 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இந்த குண்டு வெடிப்புகளில் 215 பேர் வரை உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் உலகம்  முழுவதும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று இலங்கையின் மூத்த காவல் அதிகாரி புஜுத் ஜெயசுந்தரா  சுமார் பத்து நாள்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அந்த மூத்த அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 11-ம் தேதி ஒரு அறிக்கை அளித்துள்ளார். அதில், தேசிய தவ்ஜூத் ஜமாத் என்ற அமைப்பு, இலங்கையிலுள்ள முக்கிய சர்ச்களில் பிரேயர் நடக்கும் சமயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளது இந்த  அதிபயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மூலம் தெரிகிறது.