குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மகிந்த ராஜபக்ஷேவின் கரங்கள்: கொழும்புவை குழப்பும் புது ரகசியம்.
சர்வதேசமும் இப்போது சிறீலங்கா குண்டுவெடிப்பு விவகாரத்தைத்தான் அசைபோட்டுக் கொண்டுள்ளன. அதிலும் இந்தியாவோ உள்நாட்டு பாதுகாப்பையும் சேர்த்து கவலையோடு அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
சர்வதேசமும் இப்போது சிறீலங்கா குண்டுவெடிப்பு விவகாரத்தைத்தான் அசைபோட்டுக் கொண்டுள்ளன. அதிலும் இந்தியாவோ உள்நாட்டு பாதுகாப்பையும் சேர்த்து கவலையோடு அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.
இச்சூழலில் இலங்கையில் இந்த பயங்கரவாத சம்பவத்தின் விசாரணை ஜரூராக ஆரம்பிக்கப்பட்டு, ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், ’நான் ஆட்சியிலிருந்து விலகுகையில் இந்த நாட்டை அமைதி தவழும் பூமியாக கொடுத்துவிட்டுச் சென்றேன். ஆனால் ஆட்சியாளர்கள் கெடுத்துவிட்டார்கள்.’ என்று ராஜபக்ஷே சுடச்சுட ஒரு புகாரை தட்டிவிட்டிருக்கிறார்.
இந்நிலையில், லங்கையில் நடந்த தீவிரவாத செயல்களின் பின்னணி நபர்களுடன் ராஜபக்ஷேவுக்கு கை இருக்குமோ? என்று ரீதியில் ரணிலின் ஆதரவாளர்கள் பேச துவங்கியிருப்பதும், சில விஷயங்களைச் சுட்டிக் காட்டிட துவங்கியிருப்பதும்தான் கெட்ட ஹைலைட்டே.
பக்ஷேவை இந்த பாதகத்தில் இழுத்துவிட்டு அவர்கள் சுட்டிக்காட்டும் முக்கிய விஷயமான....
* குண்டுவெடிப்பில் தாக்கப்பட்ட கொச்சிக்கடை, நீர்கொழும்பு, மட்டகளப்பு ஆகிய மூன்று தேவாலயங்களுமே தமிழர்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தவை. இங்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் என மூன்று மொழிகளிலும் தனித்தனியே பூசை நடக்கும். குண்டு வெடித்த நேரம் தமிழ் பூசை நடந்திடும் நேரம்.
இங்கே குண்டுகளை கொண்டுவருவதென்பது மிக ரிஸ்க்கான செயல். அதையும் மீறி இவ்வளவு அதிகமான குண்டு கொண்டுவரப்பட்டுள்ளது என்றால் இந்தப் பகுதியில் முன்பு பணியிலிருந்த ராணுவ அதிகாரிகளோ அல்லது புலனாய்வு அமைப்பினரோ உதவியிருக்கலாமோ! என்று சந்தேகம் எழும்புகிறது.
இப்படி ஒரு காரியத்தை இவர்கள் புரிய வேண்டிய அவசியம் ராஜபக்ஷேவின் தூண்டுதல் அல்லது மிரட்டலாய் இருக்கலாம். மீண்டும் ஆட்சியில் அமர வெறிபிடித்தாடும் பக்ஷே டீம், ‘மகிந்த வந்தால்தான் லங்கைக்கு பாதுகாப்பு’ எனும் ஸ்லோகனை மக்களே தாமாக முன்வந்து சொல்ல வைக்கவே இப்படியொரு காரியத்தை நிகழ்த்தியிருக்கலாம்.
ஈழ தமிழர்களை கொன்றழித்து சிங்களவர்களின் பாராட்டுதலுக்கு உள்ளான மகிந்த மீண்டும் அதே ரீதியில், தான் வந்தால்தான் இலங்கை பாதுகாப்பாக இருக்கும் எனும் தோற்றத்தை ஏற்படுத்திடவே இந்த காரியத்தை செய்திருப்பாரோ? என்று சந்தேகிக்க தோன்றுகிறது!
- என்கிறார்கள்.
ஆனால் இந்த ஸ்டேட்மெண்டை மிக மிக வன்மையாக கண்டிக்கவும், எதிர்க்கவும் செய்கிறது ராஜபக்ஷே தரப்பு.