வெடி குண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்த தீவிரவாதி..!! பதற வைக்கும் பகீர் காட்சிகள்..!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி தேவாலயங்களில் கூடிய போது கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே வந்த தீவிரவாதி தன் உடலில் கட்டியிருத்த வெடி குண்டை வெடிக்க செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

sri lanka terrorist attack

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி தேவாலயங்களில் கூடிய போது கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே வந்த தீவிரவாதி தன் உடலில் கட்டியிருத்த வெடி குண்டை வெடிக்க செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. sri lanka terrorist attack

ஈஸ்டர் பண்கையையொட்டி, நேற்று இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4  நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.  இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர  தாக்குதல்களில் இந்தியர்கள், அமெரிக்கா, டென்மார்க், சீனா, பாகிஸ்தான், மொராக்கோ, இந்தியா, வங்காளதேசம் ஆகிய வெளிநாடுகளை சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். sri lanka terrorist attack

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் 24 பேரை இதுவரை இலங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குண்டுவெடிப்பு நிகழ்ந்த நட்சத்திர விடுதிகளுக்கு வெடிகுண்டுகளை ஏற்றிச்சென்றதாக வேன் டிரைவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். sri lanka terrorist attack

இதனிடையே நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இவர் வெடி குண்டை சுமக்க முடியாமல் நடந்து வந்து தேவாலயத்தில் நுழைகிறார். பின்னர் அங்கு பிரார்த்தனைக்காக கூடியுள்ள மக்களை கடந்து உள்ளே செல்கிறார். பின்பக்கமாக மாட்டியுள்ள பையில் வெடிப்பொருள்களை வெடிக்க செய்துள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios