மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையா?.... இலங்கை சுதந்திரதினத்தில் இனிமேல் தமிழில் தேசியகீதம் கிடையாது.. சிங்களம் மொழி மட்டுதானாம்
உள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே கடந்த வாரம் அளித்த பேட்டியில், "இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும்.
இலங்கையில் 2016-ம் ஆண்டில் இருந்து அரசுவிழாக்களில் தமிழிலும் பாடப்பட்டுவந்த தேசிய கீதம் இனிமேல் வரும் சுதந்திரதினத்தில் இருந்து தமிழலில் தேசியகீதம் பாடப்படுவது கைவிடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை கொண்டுவரப்பட்டது. ஆனால், ஈழவிடுதலைப் போரில் தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட கோத்தபய ராஜகபக்சே அதிபராகவும், மகிந்தா ராஜபக்ச பிரதமராகவும் வந்தபின் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக வரும் 72-வது சுதந்திர தினத்தில் இலங்கையில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது நிறுத்தப்பட உள்ளது. இதை இலங்கை உள்துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.ஆனால், இலங்கையின் அரசியலமைப்புச் சட்டம் தேசிய கீதத்தைத் தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் பாடுவதை அனுமதித்த போதிலும் இலங்கை அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
உள்துறை அமைச்சர் மணிந்தா சமரசிங்கே கடந்த வாரம் அளித்த பேட்டியில், "இலங்கையில் இனிமேல் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே பாடப்படும். ஆனால், பிராந்திய அளவில் தமிழ் மொழியில் பாட அனுமதிக்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார். ஆனால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்மொழியில் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது.ஏற்கெனவே அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் கூறி வரும் நிலையில், இப்போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது நிறுத்தப்பட்டுள்ளது மேலும், அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது.