SriLanka's crisis : இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு! - கட்டுக்கடங்காத கூட்டும்! மக்கள் தவிப்பு!

SriLanka's crisis  இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவருகிறது. நாட்டின் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Sri Lanka's fuel crisis intensifies : Massive fuel queues around the country with very limited supply

இலங்கை நாட்டுக்கு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை விநியோகித்து வந்த ஏழு விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய 655 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை செலுத்துவதாக உறுதியளிக்கும் வரை எரிபொருள் விநியோகம் நடைபெறாது என அந்த விநியோகஸ்தர்கள் இலங்கை அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

655 மில்லியன் டாலர் நிலுவைத்தொகையில், 300 மில்லியன்டாலர்களை போட்ரோ சீனா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையாகும். மேலும் மற்ற ஆறு விநியோகஸ்தர்களுக்கு 355 மில்லியன் டாலர் நிலுவைத் தொகை தர வேண்டியுள்ளது.

எரிபொருளுக்கான கடனை திருப்பி செலுத்துவதற்கான உறுதியளிப்பு திட்டத்தையும், அதனுடன் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட சிறிய தவணை பணத்தையும் செலுத்துவதாக அரசு உறுதி அளித்தால், எரிபொருள் விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க தயாராக இருப்பதாக இந்த சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு விசா... டார்கெட் இவங்க மட்டும் தான்.. இலங்கை அதிரடி..!

இந்நிலையில், வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கு டீசலை விநியோகிக்கும் ஆறு தனியார் நிறுவனங்களிடம் அவசர தேவைக்காக எரிபொருளை கொள்முதல் செய்வது தொடர்பாக அரசு முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையே, இலங்கை அரசு முதற்கட்டமாக 11 மில்லியன் டாலர் செலுத்தி இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் டீசலை கொள்முதல் செய்துள்ளது.

crisis in sri lanka: இலங்கையில் 2022ம் ஆண்டுக்குள் உணவு இல்லாமல் போகலாம்! தபால் சேவை நாட்களும் குறைப்பு
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios