crisis in sri lanka: இலங்கையில் 2022ம் ஆண்டுக்குள் உணவு இல்லாமல் போகலாம்! தபால் சேவை நாட்களும் குறைப்பு
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும்நிலையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை காரணமாக, அஞ்சல் சேவையும் வாரத்துக்கு 3நாட்கள் என்று குறைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும்நிலையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை காரணமாக, அஞ்சல் சேவையும் வாரத்துக்கு 3நாட்கள் என்று குறைக்கப்பட்டுள்ளது.
தபால்கள், கடிதங்கள், பார்சல்கள் ஆகியவற்றை டெலிவரி செய்வதற்கு வாகனங்களுக்கு டீசல் நிரப்ப வேண்டும். ஆனால், இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளநிலையில் அஞ்சல் சேவையில் ஈடுபட்டுள்ள வாகனங்களுக்கு தினசரி எரிபொருள் நிரப்புவது கடினம். ஆதலால், அஞ்சல் சேவையை வாரத்துக்கு செவ்வாய், புதன், வியாழக்கிழமை ஆகிய 3 நாட்களாக இலங்கை தபால்துறை குறைத்துவிட்டது.
இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் நேற்று முதல் பெட்ரோல், டீசல் விற்பனையைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.7ஆயிரத்துக்கு மட்டுமே பெட்ரோல்,டீசல் நிரப்ப முடியும் எனத் தெரிவித்துள்ளது. அதாவது 4 முதல் 5 லிட்டர் மட்டுமே கிடைக்கும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை1 முதல் தடை: பட்டியல் தெரியுமா?
இலங்கையில் செயல்படும் இந்தியன் ஆயில் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனம் பெட்ரோல், டீசல் விற்பனையை உடனடியாகக் கட்டுப்படுத்துகிறது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1500, 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.2500,4 சக்கர வாகனங்களுக்கு ரூ.7000 மட்டுமே நிரப்பப்படும்” எனத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இந்தியன் ஆயில் மட்டும்தான் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் எரிபொருள் இருப்பு மிக வேகமாகக் குறைந்து வருவதை அறிந்த இலங்கை அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அத்தியாவசியச் சேவைகளுக்கு மட்டும்தான் தனியார் வாகனங்கள் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை செய்தித்தொடர்பாளர் பந்துலா குணவர்த்தனா கூறுகையில் “ அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள்பற்றாக்குறை குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. இதன்படி அத்தியாவசியச் சேவைகளுக்கு மட்டும்தான் எரிபொருள் வழங்கிட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. துறைமுகம், மருத்து ஆம்புலன்ஸ்,உணவு சப்ளை செய்யும் வாகனங்கள், வேளாண் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூலை10ம் தேதிக்குப்பின் தடையின்றி எல்பிஜி சமையல் கேஸ் மக்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மாநிலங்களுக்கு இடையே, மாநிலத்துக்குள் செல்லும் அரசுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் சேவைக்கும் வரி; மருத்துவமனை நோயாளி அறைக்கும் வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்
இலங்கையில் மொத்தம் 1,100டன் பெட்ரோல், 7500டன் டீசல் மட்டுமேகையிருப்பு இருக்கிறது. இது ஒருநாளுக்குகூட போதாது. ஆதலால், பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இருந்து தடையின்றி இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதித்துள்ளது” எனத் தெரிவித்தார்
இலங்கை பொருளாதாரமே திவாலாகி மக்கள்வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை, பெட்ரோல், டீசல் கையிருப்பு இல்லை, விலைவாசி கடுமையானஏற்றம், மின்சாரம்இல்லை, போக்குவரத்து முடங்கியது, கடுமையான பணவீக்கம், உணவுப் பொருட்கள் பற்றாக்குறை, எரிபொருள் இல்லை, மருந்துகள் இல்லை என அழிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை சர்வநாசமாக்கிய ராஜகபக்ச குடும்பத்தை பதவிவிலகக் கோரி மக்கள் போராடியதைத் தொடர்ந்து மகிந்தா ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகினார். புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே வந்தபோதிலும் கூட இலங்கை மக்கள் நிலைமை மாறியதாகத் தெரியவிலலை.
உலகளவில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால் இந்த ஆண்டுக்குள் உணவுப் பொருட்கள் இல்லாமல் போகும் நாடுகள் பட்டியலில், சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைப் போல் மாறும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு(எப்ஏஓ) கணித்துள்ளது. இலங்கையை இருள் சூழ்கிறது.