Sri Lanka Crisis: இலங்கை உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைப்பு|அந்நியச் செலாவணி கையிருப்பு சரிந்ததால் முடிவு

இலங்கை அரசின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதளபாதாளத்துக்குச் சென்று 50 கோடி டாலராகக் குறைந்துவிட்டதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை ஒத்தி வைத்துள்ளது. 

Sri Lanka's Forex has fallen below USD 500 million, forcing local elections to be postponed.

இலங்கை அரசின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதளபாதாளத்துக்குச் சென்று 50 கோடி டாலராகக் குறைந்துவிட்டதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை ஒத்தி வைத்துள்ளது. 

மார்ச் 9ம் தேதி இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட இருந்தது. இப்போது, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதையடுத்து, புதிய தேர்தல் வரும் மார்ச் 3ம்தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Sri Lanka's Forex has fallen below USD 500 million, forcing local elections to be postponed.

இலங்கை அரசிடம் 200 கோடி டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தாலும், அதில் 150 கோடி டாலர் சீனாவுக்கு செலுத்த வேண்டியதாகும். அந்த அந்நியச் செலவாணியை சீனாவின் உத்தரவின் பெயரில் கட்டுப்பாட்டுடன் செலவிட வேண்டும் அல்லது கடனை திருப்பிச் செலுத்த பயன்படுத்த வேண்டும்.

இலங்கைப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இலங்கைக்கு உதவ வேண்டுமானால், அமெரிக்கா மற்றும் ஜப்பான் சர்வதே செலவாணி நிதியத்துக்கு அழுத்தம் கொடுத்து கடன் வழங்க பரிந்துரைக்க வேண்டும். இதை இரு நாடுகளும் செய்வதை இலங்கை அரசு எதிர்பார்த்துள்ளது. இற்கிடையே இலங்கைக்கு அவ்வப்போது தேவையான  அனைத்து நிதி மற்றும் பொருட்கள் ரீதியான ஆதரவுகளையும் இந்தியாவும் வழங்கி வருகிறது.

அண்ணன்-தங்கை பற்றி அருவருப்பான கேள்வி!பாகிஸ்தான் பல்கலைகழகத்துக்கு வலுக்கும் கண்டனம்

இதற்கிடையே 10 ஆண்டுகள் கடன் திட்ட அடிப்படையில் சீனாவிடம் கடனுதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது. ஆனால், இலங்கைக்கு சீனா உதவும் வழியில் இருந்து விலகினால், கடன்திவாலான பல்வேறு நீண்ட பட்டியலில் உள்ள நாடுகளுக்கு சீனா உதவ வேண்டியதிருக்கும். ஏற்கெனவே சீனாவுக்கு 70 கோடி டாலர்களை சீனா எந்தவிதமான வட்டியின்றி வழங்கியுள்ளது. 

Sri Lanka's Forex has fallen below USD 500 million, forcing local elections to be postponed.

தற்போது பாகிஸ்தானிடம் 320 கோடி டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது. இதில் அடுத்த 3 வார இறக்குமதிக்கு போதுமானதாக இருக்கும்.

வாக்குச்சீட்டு அச்சடிக்க நிதி இல்லை! இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ரத்தாகிறதா?

ஆனால், இலங்கை, மற்றும் பாகிஸ்தானில் உள்ள அரசியல் சூழல், பொருளாதாரநிலை ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. மக்கள் மத்தியில் அதிருப்தியில் அரசியல் கட்சிகள், ஊழல் வழக்குகள், மோசமான நிர்வாகம் போன்றவைஇரு நாடுகளிலும் இருந்தன. இலங்கையில் தேர்தல் நடந்தால் இடதுசாரி கட்சிகளின் எழுச்சி இருக்கும். ஆனால், பாகிஸ்தானில் தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கும்  பெரும்பான்மை கிடைக்காத சூழல்தான் இருக்கிறது. 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios