Pakistan University exam:அண்ணன்-தங்கை பற்றி அருவருப்பான கேள்வி!பாகிஸ்தான் பல்கலைகழகத்துக்கு வலுக்கும் கண்டனம்
பாகிஸ்தான் பல்கலைக்கழகத் தேர்வில் அண்ணன் தங்கை பற்றி அருவருப்பான கேள்வி கேட்கப்பட்டதற்கு மாணவர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
பாகிஸ்தான் பல்கலைக்கழகத் தேர்வில் அண்ணன் தங்கை பற்றி அருவருப்பான கேள்வி கேட்கப்பட்டதற்கு மாணவர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள காம்சாட்ஸ்(COMSATS) பல்கலைக்கழகம் அண்ணன் தங்கை இடையிலான பாலுறவு குறித்த கேள்வி கேட்டதற்கு பல்வேறு பிரபலங்கள், மாணவர்கள் அமைப்பினர், மதகுருமார்கள் எனப் பலரும் பல்கலைக்கழகத்தையும், அதன் துணைவேந்தரையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கேள்வித்தாளை மாணவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களஇல் பதிவேற்றம் செய்துள்ளதால் அது வைரலாகியுள்ளது. ஜூலை மற்றும் மார்க் குறித்த கட்டுரை எழுது என்றும், ஜூலி மற்றும் மார்க் குறித்த கேள்விகளுக்கு பதில் எழுதுக என்ற கேட்கப்பட்ட கேள்விகளும் அருவருப்பு மிகுந்தவையாக உள்ளன
ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதாகத் தகவல்
இளநிலை மின்னணு பொறியியல் பிரிவு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் செமஸ்டர் தேர்வில் இந்தக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வித்தாள் இப்போது வைரலாகியுள்ளது.
அந்தக் கேள்வியில் “ ஜூலி மற்றும் மார்க் இருவரும் சகோதர, சகோதரிகள். இருவரும் பிரான்ஸ் நாட்டுக்கு கோடை விடுமுறைக்குச் செல்கிறார்கள். ஒருநாள் இரவு இருவரும் கடற்கரை அருகே இருக்கும் கேபினில் தங்குகிறார்கள். அப்போது இருவரும் வித்தியாசமாக ஏதாவது செய்து பார்க்கலாம் என்று எண்ணி பாலுறவு வைக்கிறார்கள்.
இதில் மார்க் ஆணுறையும், ஜூலை கர்ப்பத்தடை மாத்திரையும் உட்கொண்டுவிட்டார். இதுபோன்ற மறுமுறை எந்த முயற்சியும் செய்யக்கூடாது என உறுதி எடுத்தனர்” எனக் கேட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், இந்தக் காதல் சரியானதா, சரியானது என்றால் உதாரணங்கள் வழங்கவும் என்று கேட்கப்பட்டுள்ளது.
காருடன் உறவு கொள்ளும் இளைஞர்! அதிர்ச்சியில் தந்தை!
இந்த கேள்வித்தாளுக்கும், அதைத் தயாரித்த பேராசிரியருக்கும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
நடிகரும் பாடகருமான மிஷி கான் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ வெட்கமாக இருக்கு. உங்கள் பல்கலைக்கழகத்தை பூட்டி சீல் வைக்க வேண்டும், கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர்களை வெளியேற்ற வேண்டும். இந்த கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியை சிறையில் அடைக்க வேண்டும். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்க என்ன துணிச்சல் இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உதவியாளர் ஷெஹ்ரியார் புகாரி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ பாகிஸ்தானில் உள்ள உயர்ந்த பல்கலைக்கழகங்கள், இளைஞர்களையும், கலாச்சாரத்தையும், மதித்தின் உயர்ந்த மதிப்புகளையும் அழிக்கின்றன”எ னத் தெரிவித்துள்ளார்
இந்தக் கேள்வித்தாளை தயாரித்த பேராசிரியர் காயர் உல் பாஷர். இவர் மீது விசாரணை நடத்திய பல்கலைக்கழ நிர்வாகம் அவரை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக நியூயார்க் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் “ இந்தக் கேள்வித்தாளில் உள்ள கேள்வி மிகுந்தகண்டனத்துக்குரியது. பாகிஸ்தான் கடைபிடிக்கும் இஸ்லாமிய மரபுகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானது. இந்த கேள்வியால் மாணவர்களின் குடும்பத்தினர், மாணவர்கள் அனைவரும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்” எனத் தெரிவித்துள்ளது.