இலங்கை அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது... மீண்டும் பிரதமரானார் ரணில்...!

இலங்கை பிரதமராக 5-வது முறையாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இலங்கை அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

Sri Lanka reinstates ousted Prime Minister Ranil Wickremesinghe

இலங்கை பிரதமராக 5-வது முறையாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இலங்கை அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. Sri Lanka reinstates ousted Prime Minister Ranil Wickremesinghe 

கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி ரணிலை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக சிறிசேனா நீக்கினார். உடனே ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் சிறிசேனா நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பலமுறை நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பெரும்பான்மையை ராஜபக்சேவால் நிரூபிக்க முடியாமல் போனது.

 Sri Lanka reinstates ousted Prime Minister Ranil Wickremesinghe

மேலும் உச்சநீதிமன்றம் சிறிசேனா நடவடிக்கை செல்லாது என அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ரணில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக 5-வது முறையாக பதவியேற்றுக்கொண்டார். ஒரு போதும் ரணிலை பிரதமராக அனுமதிக்க முடியாது என தெரிவித்த அதிபர் சிறிசேனாவே பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை திங்கட்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios