திரையரங்கில் மீண்டும் குண்டுவெடிப்பு... உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை..!

கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கு அருகே கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகனத்தில் இருந்து குண்டை செயலிழக்க செய்த போது வெடித்ததாக கூறப்படுகிறது. 

Sri Lanka police carry out controlled explosion

கொழும்பில் உள்ள சவாய் திரையரங்கு அருகில் மீண்டும் குண்டுவெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்கு அருகே கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகனத்தில் இருந்து குண்டை செயலிழக்க செய்த போது வெடித்ததாக கூறப்படுகிறது. Sri Lanka police carry out controlled explosion

இலங்கை தலைநகர் கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று 4 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட 9 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் கூடியிருந்த 350-க்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. Sri Lanka police carry out controlled explosion

இலங்கை வரலாற்றில் மிக மோசமான இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காமல் இருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு நேற்று ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தொடர்ந்து அவசர நிலை பிரகடனம் நீடித்து வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 30-க்கும் மேற்பட்டரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகள் நிரப்பிய சிறிய வேன் ஒன்றும், லாரி ஒன்றும் நுழைந்துள்ளதாக தகவல் பரவியது. இதனால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டது.

 Sri Lanka police carry out controlled explosion

இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் வெல்லவெட்டா பகுதியில் உள்ள சவாய் திரையரங்கில் கடந்த சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. கேட்பாரற்று இருந்த அந்த பைக்கில் இருந்து சிறிய வெடிச்சத்தம் கேட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து பைக்கின் சீட் அடியில் இருந்த வெடிகுண்டை திறக்க முடியாததால் வெடிகுண்டு நிபுணர்கள் அதனை வெடிக்க செய்ததாக தகவல் வெளியானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கையில் வாகனங்களில் தீவிர சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios