சீனாவை நம்பி மோசம் போகாதீர்கள்; உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவின் செயலுக்கு வராத முட்டாள்தனமான முதலீடுகளால் இலங்கை இன்று பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. உலக நாடுகள் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சிஐஏ தலைவர் பில் பர்ன்ஸ் எச்சரித்துள்ளார்.

Sri Lanka made 'dumb bets' on China: CIA chief warns

சீனாவின் செயலுக்கு வராத முட்டாள்தனமான முதலீடுகளால் இலங்கை இன்று பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது என்று அமெரிக்காவின் தலைமை உளவு ஏஜென்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், சீனாவை நம்பி ஏமாந்து விடவேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஏஸ்பன் பாதுகாப்பு அமைப்பில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ தலைவர் பில் பர்ன்ஸ் பேசுகையில், ''இலங்கை செய்த தவறு மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. சீனர்களிடம் அதிக முதலீடு செய்வதற்கான பலம் இருக்கிறது. மற்ற நாடுகளில் முதலீடு செய்வதற்கு தேவையான வாக்குறுதிகளையும் அவர்களால் அளிக்க முடிகிறது.

சீனா கொடுத்த முட்டாள்தனமான வாக்குறுதிகளால் இன்று இலங்கை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் சீர்குலைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துள்ளது. இலங்கையின் பாடம் மத்திய ஆசிய நாடுகள், தெற்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Sri Lanka: இலங்கையின் 8வது அதிபராக பொறுப்பேற்றார் ரணில் விக்ரமசிங்கே!!

பெரிய அளவில் நிதி சிக்கலில் இருந்த இலங்கையில் சீனா முதலீடு செய்தது. இது இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பு குறைவதற்கு காரணமாக அமைந்தது.  உணவுப் பஞ்சம் மற்றும் எரிபொருள் சிக்கலுக்கு இட்டுச் சென்றது. 

ஹம்பன்தோட்டா துறைமுகத்தை கட்டுவதற்கு சீனாவிடம் 1.44 பில்லியன் டாலரை இலங்கை கடனாக பெற்று இருந்தது. இறுதியில் இலங்கையால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது சீனா. ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு சீனா எடுத்துக் கொண்டது. இந்த துறைமுகம் சீன ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி மற்றும் சினோ ஹைட்ரோ கார்பரேஷனால் இணைந்து அமைக்கப்பட்டு இருந்தது.

இந்திய பெருங்கடலுக்கு அருகே ஹம்பன்தோட்டா துறைமுகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லைப் பகுதிகளில் ஏற்கனவே சீனா பிரச்சனை கொடுத்து வருகிறது. இந்த நிலையில்,  இந்த துறைமுகம் , இந்தியாவுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியது. ஆனால், தற்போது இந்தியாவின் நிதி உதவியை சிக்கலில் இருக்கும் இலங்கை கோரி வருகிறது.

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்தான் விசா: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்

நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் சீனாவை விட இந்தியா தான் அதிகளவில் இலங்கைக்கு நிதியுதவி அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களில் இந்தியா 3,000 கோடிக்கும் அதிகமான நிதியுதவியை அளித்துள்ளது. ஆனால், இலங்கையுடன் பொருளாதார உறவு வைத்து இருந்த சீனா இதே கால கட்டத்தில் வெறும் 542 கோடி மட்டுமே அளித்து இருந்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios