உச்சக்கட்ட பதற்றம்... அடுத்தடுத்து 8 குண்டுவெடிப்பு... இலங்கையில் அவசர நிலை பிரகடனம்..!

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 

Sri Lanka imposes 'temporary' social media ban after blasts

இலங்கையில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பையடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஈஸ்டர் பண்கையையொட்டி, இன்று இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், நீர் கொழும்பு தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி உள்ளிட்ட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடைபெற்று உள்ளது. Sri Lanka imposes 'temporary' social media ban after blasts

இந்த குண்டு வெடிப்பு சம்வங்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 187-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. Sri Lanka imposes 'temporary' social media ban after blasts

இந்நிலையில், மதியம் 2 மணியளவில் தெகிவாலா பகுதியில் (7-வது குண்டுவெடிப்பு) உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாயினர். மதியம் 2.45 மணியளவில் டெமாட்டாகொடா என்ற ( 8-வது குண்டுவெடிப்பு) பகுதியில் குண்டு வெடித்தது. இதில் பலியானவர்கள் விவரம் வெளியாகவில்லை. இதனையடுத்து தலைநகர் கொழும்புவில் பதற்றம் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Sri Lanka imposes 'temporary' social media ban after blasts

இதன் தொடர்ச்சியாக, இலங்கையில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 6 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்றார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios