sri lanka: gotabaya rajapaksa: இலங்கை ராஜதந்திரி கோத்தபய ராஜபக்ச: மக்களுக்குப் பயந்து இரவே தப்பினார்?

இலங்கையில் போராட்டக்காரர்களின் போரட்டம் கொந்தளிப்பாக மாறும் என முன்கூட்டியே கணித்த அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

இலங்கையில் போராட்டக்காரர்களின் போரட்டம் கொந்தளிப்பாக மாறும் என முன்கூட்டியே கணித்த அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவத்தின் தலைமை அலுவலகத்துக்கு தப்பி ஓடிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gotabaya Rajapaksa: கோத்தபய ராஜபக்சே தப்பி ஓட்டம்: இலங்கை அதிபர் இல்லத்துக்குள் நுழைந்த மக்கள்

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

இலங்கையின் பொருளாதாரம் அழிவின் பிடியில் சிக்கி இருக்கிறது. அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாததால், வெளிநாட்டிலிருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. 

Sri Lanka: மீண்டும் எரியும் இலங்கை; தப்பி ஓடிய கோத்தபய

இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதத்தை எட்டியதால் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துவிட்டது. அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மருந்துகள், பால் பொருட்கள் அனைத்தும் விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. தினசரி 12மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு என மக்கள் கொடுமையான சூழலை எதிர்கொண்டு வருகிறார்கள்.

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

இலங்கை அரசின் தவறான, அழிவுக்கு வழிவகுக்கும் பொருளாதாரக் கொள்கையால் மக்கள் ஒருநாள் இரவில் பிச்சைபாத்திரம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இலங்கையை தேசத்தை மோசமான பொருளாதாரச் சூழலுக்குத் தள்ளிய அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இலங்கையில் 60 லட்சம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பில்லை: ஐ.நா. எச்சரிக்கை

நாட்டை அழிவுக்குகொண்டு சென்ற ராஜபக்ச குடும்பத்தினர் பதவி விலகக் கோரி மக்கள் கடந்த பி்ப்ரவரி மாதம் முதல் போராடி வருகிறார்கள். ராஜபக்ச குடும்பத்தில் அனைவரும் பதவியிலிருந்து இறங்கிய நிலையில் அதிபர் கோத்தபய மட்டும் விலகவில்லை.

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்து விலகக் கோரி மக்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாகப் போராடி வருகிறார்கள். அதிலும் இன்று அனைத்து தரப்பிலும் சேர்ந்து போராட்டம் நடத்த அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. இதனால், இன்று(9ம்தேதி) மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும், கட்டுப்பாட்டை மீறும் என்று உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் சென்றது.

இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சவை ரகசியமாக நேற்று இரவே ராணுவத்தினர் தீவிரமான பாதுகாப்புடன், ராணுவத் தலைமை அலுவலகத்துக்கு மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

இந்நிலையில் இன்று காலைமுதல் அதிபர் மாளிகைமுன் நடந்து வரும் போராட்டம் கட்டுப்பாட்டை மீறியது. போலீஸாரின் தடுப்புகளை மீறி,  அதிபர் மாளிகைக்குள் மக்கள் படையெடுத்தனர். அதிபர் மாளிகைக்குள் படையெடுத்த மக்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். 

crisis in sri lanka: இலங்கையில் 2022ம் ஆண்டுக்குள் உணவு இல்லாமல் போகலாம்! தபால் சேவை நாட்களும் குறைப்பு

கொழும்பு நகரில் போராட்டத்தில் பங்கேற்கபதற்காக ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் ரயில்வே துறை அதிகாரியை வலியுறுத்தி ரயில்களை இயக்க வைத்து அதில் பயணித்தனர். 

sri lanka crisis: Gotabaya Rajapaksa was moved to the Army headquarters last night

இலங்கை பொதுஜனா பெரமுனா கட்சியியைச் சேர்ந்த16 எம்பிக்கள், இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்ச உடனடியாக விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால் கோத்தபய ராஜபக்ச அதிபர் பதவியிலிருந்துவிலக நெருக்கடி அதிகரித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios