sri lanka crisis: இலங்கையில் அரசியல் நெருக்கடிமுற்றுகிறது: பதவி ஏற்ற மறுநாளிலேயே புதிய நிதி அமைச்சர் ராஜினாமா

sri lanka crisis:  இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று புதிதாக நிதிஅமைச்சராகப் பதவி ஏற்ற அலி சாப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

sri lanka crisis :  A day after his appointment, Sri Lanka's Finance Minister resigns

இலங்கையில் பொருளாதாரப் பிரச்சினை தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்றுபுதிதாக நிதிஅமைச்சராகப் பதவி ஏற்ற அலி சாப்ரி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பொருளாதாரப் பிரச்சினை

இலங்கை அரசு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், இறக்குமதிக்கு அரசிடம் அன்னியச்செலவாணி கையிருப்பு இல்லாததால், உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியாவிடமும், சர்வதேச நிதியத்திடமும் கடனுதவி கோரியுள்ளது இலங்கை அரசு. 

sri lanka crisis :  A day after his appointment, Sri Lanka's Finance Minister resigns

இந்தியா உதவி

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால் போக்குவரத்து இலங்கையில் பெரும்பகுதி முடங்கிவிட்டது. இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் 40ஆயிரம் லிட்டர் டீசல் நேற்று அனுப்பப்பட்டபின் மீண்டும் மின்நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.

மக்கள் போராட்டம்

இலங்கை முழுவதும் பொருட்களின் விலைவாசி எகிறியுள்ளதால் மக்களின் கோபம், விரக்தி ஆட்சியாளர்களை நோக்கித் திரும்பியுள்ளது. அதிபர் ராஜபக்ச இல்லத்தின் கடந்த இரு நாட்களுக்கு முன் மக்கள் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், மக்களுக்கும் இடையே நடந்த மோதலில் பலர் காயமடைந்தனர். 45 பேர் கைது செய்யப்பட்டனர். 

sri lanka crisis :  A day after his appointment, Sri Lanka's Finance Minister resigns

இதைத் தொடர்ந்து இலங்கையில் சட்டம் ஒழுங்கைக் காக்க அவசரநிலை கொண்டுவரப்பட்டது. மேலும், சமூக ஊடகங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இருப்பினும் விரக்தி அடைந்த மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள்

அமைச்சரகள் ராஜினாமா

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் இருப்பதால் பிரதமர் மகிந்தா ராஜபக்ச அமைச்சரவையில் 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.இதில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சாப்ரி நேற்று நியமிக்கப்பட்டார். இது தவிர வெளியுறவு அமைச்சராக ஜிஎல் பெரிஸ், கல்வித்துறை அமைச்சராக தினேஷ் குணவர்த்தனே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக ஜான்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

sri lanka crisis :  A day after his appointment, Sri Lanka's Finance Minister resigns

நிதிஅமைச்சர் விலகல்

இந்நிலையில் பதவி ஏற்ற மறுநாளில் நிதிஅமைச்சராக இருந்த அலி சாப்ரி தனது பதவியை ராஜினாமா செய்து அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் அலி சாப்ரி கூறுகையில் “ நிதிஅமைச்சர் பொறுப்பிலிருந்து உடனடியாக நான் ராஜினாமா செய்கிறேன். நான் தற்காலிகமாகவே இந்த பொறுப்பை ஏற்றேன். ஆனால், முன்எப்போதும் இல்லாத அளவு சிக்கல்கள், போராட்டங்கள் நடந்துவருகின்றன.  ஆதலால் இதை திறமையாக சமாளிக்கும் வகையில் உங்கள் அரசு புதிய நிதிஅமைச்சரை நியமிகக் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

sri lanka crisis :  A day after his appointment, Sri Lanka's Finance Minister resigns

ஆதரவு வாபஸ்

இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஆளும் எஸ்எல்பிபி கட்சி இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 123 எம்பிக்கள் ஆதரவு தேவை. ஆனால் ஆளும் எஎஸ்எல்பிபி கட்சியில் இருந்த கூட்டணிக் கட்சியினர், அந்தக் கட்சியைச் சேர்ந்த 41 எம்.பி.க்கள் கூட்டணியிலிருந்து விலகி இன்று வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, சில சுயேட்சை எம்.பி.க்கள் சிறிய கட்சிகள் ஆதரவு அளித்துள்ளனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios