Sri Lanka Crisis: இலங்கையில் 3 ஆண்டுகளில் 2 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டனர்: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிபேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடிபேர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதாரச் சீர்குலைவு மக்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அரசிடம் அந்நியச்செலாவணி கையிருப்பு இல்லாததால், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியவில்லை. இதனால் விலைவாசி உயர்வு, பணவீக்கம் விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளன.
இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு
அத்தியாவசியப் பொருட்கள் விலைஏற்றத்தால் சாமானிய மக்கள் நிலை மோசமடைந்து, மக்கள் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டனர். இலங்கையில்ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடி, மக்களிடம் ஏற்படுத்திய தாக்கங்கள், பாதிப்புகள் குறித்து இலங்கையில் உள்ள பெரடனியா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது அதில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் கொரோனாவுக்குப்பின் கடந்த 3 ஆண்டுகளில் 2 கோடி மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 2019ம் ஆண்டில் 30 லட்சம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருந்தனர். தற்போது அது 2 கோடியாக அதிகரித்துள்ளது.நாட்டின் மொத்த மக்கள் தொகையில்45 சதவீதம் பேர், அதாவது 2 கோடி பேர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதாரச் சூழலில் வாழ முடியாத நிலையை எண்ணி அந்நாட்டிலிருந்து மருத்துவர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள். இவ்வாறு மருத்துவர்கள் இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இன்னும் 800 மருத்துவர்கள் வரை வெளிநாடுகளுக்கு செல்ல தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு
இலங்கை மருத்துவக் கூட்டமைப்பு செயலாளர் ஹரிதா அலுகே கூறுகையில் “ இலங்கையிலிருந்து மருத்துவர்கள் வெளியேறுவதை அரசு தடுக்காவிட்டால், மோசமான சூழல் உருவாகிடும். அரசு மருத்துவக் கட்டமைப்பிலிருந்து 800 மருத்துவர்களை இழக்க நேரிடும். அரசு மருத்துவமனைகளில் சாமானிய மக்களுக்கான சேவை மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
- crisis in sri lanka
- economic crisis in sri lanka
- economic emergency in sri lanka
- food crisis sri lanka
- sri lanka
- sri lanka crisis
- sri lanka economic crisis
- sri lanka economic crisis explained
- sri lanka economy
- sri lanka economy crisis
- sri lanka financial crisis
- sri lanka food crisis
- sri lanka food emergency
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka protest
- sri lankan economic crisis
- sri lankan economy crisis
- why sri lanka economic crisis
- world news