Sir Lanka: நாட்டை விட்டு வெளியேற ராஜபக்சே சகோதர்களுக்கு நீதிமன்றம் தடை
இலங்கை முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேற அந்த நாட்டின் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு, வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை வெளியேறக் கூடாது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலங்கை நாட்டின் அதிபராக 3 முறை இருந்தவர் மகிந்த ராஜபக்சே. அந்த நாட்டின் சட்டத்தின்படி 3 முறைக்கு மேல் அதிபராக இருக்கக் கூடாது என்பதால், கடந்த முறை நடந்த தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரை 3 முறை அதிபராக இருந்தார். இவர் அதிபராக இருந்தபோதுதான், இனப்போர் பெரிய அளவில் நடந்து 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. போரில் பெரிய அளவில் இலங்கை அரசு செலவிட்டு இருந்தது.
gotabaya rajapaksa: sri lanka: இலங்கை முன்னாள்அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்
இவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே 2019ஆம் ஆண்டில் அதிபர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே நிதியமைச்சராக இருந்தார். மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் இலங்கையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்தனர். நாட்டின் பல்வேறு திட்டங்களில் இலங்கை அரசு முதலீடு செய்தது. இதற்கு சீனா உள்பட வங்கிகளில் இருந்து 55 பில்லியன் டாலர் அளவிற்கு கடன் வாங்கி இருந்தது.
இந்தக் கடன் தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் கொரோனாவும் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. பால் பவுடர், பேப்பர், மருந்து என்று உயிர் காக்கும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இலங்கை இறக்குமதி செய்து வந்தது.
கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்...??? வெளியான பரபரப்பு தகவல்.
இலங்கையின் ஏற்றுமதி என்றால் தேயிலை, ஆடைகள் மட்டுமே இருந்து வந்தது. சுற்றுலா தலமாக இருந்தது. கொரோனா ஏற்பட்ட காரணத்தால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது. இவற்றை கடந்து வரும்போது, கடனை திருப்பி அடைக்க முடியாமல் இலங்ககை அரசு திண்டாடியது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. அந்நிய செலாவணி இருப்பு குறைந்தது.
இறக்குமதியும் செய்ய முடியவில்லை. சரியான நிதி நிர்வாகம் செய்யாத ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியால்தான் இந்த நிலைமை என்ற முடிவுக்கு வந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருக்கிறார். அங்கு தங்குவதற்கு அந்த நாட்டு அரசு மேலும் 15 நாட்களுக்கு விசா வழங்கியுள்ளது.
இந்த நிலையில் நாட்டை விட்டு தப்பி விட்டார் என்று கூறப்பட்ட பசில் ராஜபக்சே இலங்கையில் தான் இருக்கிறார். மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே இருவரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்று மீண்டும், ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜனத ஜெயசூர்யா தலைமையிலான ஐவர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.