இலங்கை குண்டு வெடிப்பு... பயங்கர வீடியோ வெளியானது..! பலியானோர் எண்ணிக்கை 137-ஆக உயர்வு..!

இலங்கையில் இன்று 6 இடங்களில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 137-ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

Sri Lanka Churches, Hotels Blasts...137 Dead, 300 Injured

இலங்கையில் இன்று 6 இடங்களில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 137-ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. Sri Lanka Churches, Hotels Blasts...137 Dead, 300 Injured

ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வந்தது. இன்று காலை 8.45 மணி அளவில் கொழும்பில் உள்ள 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.Sri Lanka Churches, Hotels Blasts...137 Dead, 300 Injured

கொச்சிக்கடை அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதுதவிர நட்சத்திர ஹோட்டல்களான ஷாங்ரிலா, சினமான் கிராண்ட், கிங்ஸ்பரி 
குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது. Sri Lanka Churches, Hotels Blasts...137 Dead, 300 Injured

சம்பவ  இடத்திற்கு  விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த குண்டு வெடிப்பு சம்வங்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 137-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் தங்கியிருந்தனர். 

 

இதனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் மட்டக்களப்பு பகுதி தமிழர்கள் அதிகம் நிறைந்த இடமாகும். இதனால் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. 3 தேவாலயம், 3 நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய 6 இடங்களில் அடுத்தடுத்த நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios