அரேபிய பெண்கள், ஓரினச்சேர்க்கை, சவுதி அரசு வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

இந்நிலையில் திடீரென  அரேபிய அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணியம் பேசுவது,  நாத்திகம் பேசுவது,  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது.  போன்றவை  தீவிரவாதத்திற்கு இணையான குற்றமாக கருதப்படும் என  எச்சரித்துள்ளது .  எந்த வகையிலும் இம்மூன்று கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாது என அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

southi Arabian government new announcement video released for restrict feminism and bisexual and atheist

சவுதியில் புதிதாக பதவியேற்ற இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் இறங்கி வந்த நிலையில் திடீரென அவற்றை திரும்பப் பெற்றுள்ளதும் திடீர்  கட்டுப்பாடுகளை விதித்துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான சட்டதிட்டங்கள் என்றால் அதற்கு ஒரே எடுத்துக்காட்டு சவுதி அரேபியாதான் என்பதை அனைவரும் அறிவோம்.  என்னதான் பொருளாதாரத்திலும் மற்ற துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருந்தாலும்கூட  பெண்களுக்கு அந்த நாட்டில் சுதந்திரம் இல்லை.  அவர்களை அடிமை போல பாவிக்கப்படுகின்றனர். என்று சவுதி  அரேபியா மீது குற்றச்சாட்டு உண்டு.

southi Arabian government new announcement video released for restrict feminism and bisexual and atheist

ஆனால் அவற்றையெல்லாம் மாற்றி அமைக்கும் வகையில் ஆண்களுக்கு இணையாக சவுதி அரேபிய பெண்களும் சம உரிமையுடன் நடத்தப்படுவார்கள் என்று புதிதாக பதவியேற்ற இளவரசர் முகமது பின் சல்மான் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வந்தார்.  குறிப்பாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு லைசன்ஸ் அனுமதி,   கல்வி கற்பதில் சுதந்திரம்,  பெண்கள் கிரிக்கெட் விளையாட அனுமதி,  என பல்வேறு முடிவுகளை அவர் அறிவித்து  அசத்தினார்.  இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பும் ஆதரவும்  நிலவி வருகிறது.  இந்நிலையில் திடீரென  அரேபிய அரசு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில் முக்கியமாக மூன்று விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்ணியம் பேசுவது,  நாத்திகம் பேசுவது,  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது.  போன்றவை  தீவிரவாதத்திற்கு இணையான குற்றமாக கருதப்படும் என  எச்சரித்துள்ளது .  எந்த வகையிலும் இம்மூன்று கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாது என அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

southi Arabian government new announcement video released for restrict feminism and bisexual and atheist

அளவுக்கதிகமாக திணிக்கப்படும் எந்த கருத்தும்  தீவிரவாத கருத்துக்களே என அதில் கூறப்பட்டுள்ளது.  சவுதியிலும் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என சர்வதேச அரசியல் நோக்கர்கள்,   மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக நீதியில் அக்கறையுள்ளவர்கள் எதிர்நோக்கி வந்த நிலையில் ,  சவுதி அரேபியாவின்  இத் திடீர் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  அதே வேளையில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் சட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios