கலிபோர்னியாவில் மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு... 13 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவில் மதுபான பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மதுபான பாரில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Southern California Bar Shooting...13 People Killed

தெற்கு கலிபோர்னியாவில் மதுபான பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மதுபான பாரில் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் பொதுமக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒபாமா ஆட்சியில் துப்பாக்கி கலாச்சாரத்து முடிவுக்கு கட்ட பல்வேறு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. Southern California Bar Shooting...13 People Killed

மேலும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை சட்டம் இயற்றப்பட்டது. Southern California Bar Shooting...13 People Killed

இந்நிலையில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான பாரில் புகுந்த மர்ம நபர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் பலர் பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மதுபான விடுதியை சுற்றி வளைத்தனர். பிறகு அந்த நபரை சுட்டுக்கொன்றனர். மர்ம நபர் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios