அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்... 16 பேர் உடல் சிதறி உயிரிழப்பு!

சோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 2 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

Somalia suicide bombings... 16 dead

சோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து 2 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 16 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். சோமாலியா நாட்டின் பாய்டோவா நகரில் உள்ள பிலன் ஓட்டல் மற்றும் பத்ரி ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். Somalia suicide bombings... 16 dead

இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்த பொதுமக்கள் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு சோமாலியாவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 Somalia suicide bombings... 16 dead

சோமாலியாவில் 30 ஆண்டுகளாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தீவிரவாத அமைப்புக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios