ஓட்டலில் தற்கொலை படை தாக்குதல்... 26 பேர் உடல்சிதறி உயிரிழப்பு..!
சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 26 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
சோமாலியாவில் ஓட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படைத்தாக்குதலில் 26 பேர் உடல்சிதறி உயிரிழந்தனர்.
சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று ஒரு வாகனம் வந்தது. ஓட்டலின் பிரதான கட்டிடத்தை நெருங்கிய அந்த வாகனம், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், ஓட்டலில் இருந்த பலரது உடல்கள் சிதறின. இதனையடுத்து, மற்றொரு வாகனத்தில் வந்த தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட தொடங்கினர்.
இதனையடுத்து, உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், பாதுகாப்பு படையினர் ஓட்டலை சுற்றி வளைத்து தீவிரவாதிகள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தற்கொலை படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சண்டையில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.