Asianet News TamilAsianet News Tamil

பெண்ணின் காதுக்குள் புகுந்த பாம்பு... அடுத்து நிகழ்ந்தது என்ன? அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ!!

பெண்ணின் காதுக்குள் புகுந்து ஆட்டம் போடும் பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

snake went inside womans ear and video goes viral
Author
First Published Sep 7, 2022, 8:59 PM IST

இணையத்தில் தினந்தோறும் வீடியோக்கள் பல வைரலாகி வருகிறது. இணையத்தில் பகிரப்படும் வித்தியசமான வீடியோக்களை காண ஒரு கூட்டமே உள்ளது. இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அது காண்போரை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. பாம்பை காட்டுக்குள் பார்த்திருக்கலாம், வீட்டுக்குள் பார்த்திருக்கலாம், ஆனால் ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு இருப்பதை பார்த்ததுண்டா? ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு சென்றுவிட்டது.

இதையும் படிங்க: பிரிட்டனின் உள்துறை அமைச்சராக தமிழரான சுயல்லா பிரேவர்மேன் நியமனம்: யார் இவர்?

இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைராகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு சென்றுவிட்டது. அதனை மருத்துவர் ஒருவர் எடுக்க முயற்சித்து வருகிறார். இந்த சம்பவம் எப்போது எங்கே நடைபெற்றது என்று தெரியவில்லை. இந்த வீடியோவை காண்டும் அனைவருக்கும் காதுக்குள் பாம்பு போகும் வரை அந்தப் பெண்ணுக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்று கேள்வி எழுந்துள்ளது. காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை சமூக ஊடகங்களில் பதியப்படும் வீடியோக்களில் பார்க்க முடிகிறது.

இதையும் படிங்க: ரோபோகளை திருமணம் செய்யும் மனிதர்கள் - ஆராய்ச்சியாளர் தகவல்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shilpa Roy (@shilparoy9933)

இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக வைரலாகின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்கள் வேடிக்கையானதாக இருந்தால், பல சமயங்களில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios