Asianet News TamilAsianet News Tamil

என்னது 22 கோடியா? ஏலம் விடப்பட்ட உலகின் காஸ்ட்லியான விஸ்கி - அதுல அப்படி என்னப்பா இருக்கு?

Costliest Whisky in the World : உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே மது என்கின்ற சிற்றின்பம் இருந்து வருகிறது. காலங்கள் மாறும் நேரத்தில், மனிதனின் மது உட்கொள்ளும் விதமும் மாறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்பொழுது உலக அளவில் மதுவிற்கு என்று ஒரு மிகப்பெரிய மார்க்கெட் உள்ளது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

Sixty Years old Worlds Costliest Whisky sold in London Auction for 22 crores ans
Author
First Published Nov 21, 2023, 10:29 AM IST | Last Updated Nov 21, 2023, 10:29 AM IST

குறிப்பாக இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளில் அறிய வகை மதுபானங்கள் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. மது பிரியர்கள் மத்தியில் இது மிகப் பெரிய வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய மது விற்பனை ஏலத்தில், ஸ்காட்டிஷ் நாட்டை சேர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று சுமார் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. 

இந்திய மதிப்பில் இது சுமார் 22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல மது விற்பனை நிரபனமான சோதேபி இந்த விற்பனையை செய்துள்ளது. உலக அளவில் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த மதுக்களை ஏலம் விடும் இந்த நிறுவனம் வெளியிடும் மதுக்களை வாங்குவதற்கு என்று உலகில் உள்ள பல பணக்காரர்கள் போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது. 

1926 Macallan

இந்நிலையில் விஸ்கி பிரியர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவில் அந்த நிறுவனம் ஒரு விஸ்கி பாட்டிலை ஏலத்தில் விட்டு அது சுமார் 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு குழுவில் ஐக்கியமாகும் சாம் ஆட்மேன், கிரேக் ப்ரோக்மேன்; சத்யா நாதெல்லா பதிவு!

சுமார் 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள இந்த விஸ்கியின் பெயர் Macallan Adami 1926 என்பதாகும். கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை வெறும் 40 பாட்டில்களே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த விஸ்கி பாட்டிலில் உள்ள அந்த மது மிக மிக குறைவான அளவில் எடுத்துக் கொண்டாலே மிகப்பெரிய போதையை அதை உட்கொள்பவர்களுக்கு தரும் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios