விண்வெளியில் பூமியின் சுழற்சி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து தகவல்களை சேகரிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 6 சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ நாஸா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, பூமியில் ஏற்படும் சூறாவளி, புயல் மற்றும் பருவ மாற்றங்கள் போன்றவற்றை கண்காணித்து தகவல்களை சேகரிக்கவும், பூமியின் சுழற்சி நிலைகள் குறித்து ஆய்வு செய்யவும் 6 சிறிய ரக செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் பணியில் களமிறங்கியுள்ளது.

முதன்முறையாக செய்யப்படவிருக்கும் இத்தகைய முயற்சியினால் பூமியில் ஏற்படும் அனைத்து விதமான பருவ மாற்றங்களை அறிந்து, அதற்கேற்ப நம் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள முடியும் எனவும் நாஸா அறிவித்துள்ளது. விரைவில் இந்த 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.