பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், சவுதி, யுஏஇ நாடுகள் சேர்ப்பு; பிரதமர் மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து!!

பிரிக்ஸ் அமைப்பில் அர்ஜென்டினா, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகள்  இனி நிரந்தர உறுப்பு நாடுகளாக பங்கேற்கும் என்று பிரிக்ஸ் மாநாட்டின் இறுதி நாளில் தென் ஆபிரிக்கா அதிபர் சிரில் ராம்போசா அறிவித்தார். இந்த நாடுகள் ஜனவரி 2024 முதல் அங்கீகாரம் பெறுகின்றன.

Six nations join in the BRICS, Xi jinping convey wishes to PM Modi for Chandrayaan 3 success!!

பிரிக்ஸ் அமைப்பில் மேலும் பல நாடுகள் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் இன்று அர்ஜென்டினா, எதியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, யுஏஇ ஆகிய நாடுகளுக்கு பிரிக்ஸ் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. உலகின் தெற்கு பிராந்தியத்தில் இருக்கும் இந்த நாடுகள் அனைத்தும் இணைந்து இந்த பிராந்தியத்தில் பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்படுவதற்கு முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதுவரை இந்த அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே உறுப்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இந்த நாடுகள் அனைத்துமே மற்ற நாடுகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்த நிலையில் இன்று இந்த அறிவிப்பை தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா அறிவித்தார். 

BRICS மாநாட்டிற்கு பிறகு கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர்.. அடுத்த விசிட் ISROக்கு தான் - முழு விவரம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி:
இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது அதன் பலத்தை அதிகரிக்கும் என்றும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிடையே பலமுனை நம்பிக்கையை ஏற்படுத்தும். பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராம்போசாவுக்கு வாழ்த்து கூறுகிறேன். உச்சிமாநாட்டில் இருந்து பல நேர்மறையான முடிவுகள் வெளிவந்துள்ளன. புதிய உறுப்பினர்களின் வருகை பிரிக்ஸ் அமைப்பை வலிமையாக்கும். இந்தியா எப்போதும் பிரிக்ஸ் அமைப்பை விரிவாக்கும் செய்வதற்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளது'' என்றார். 

Six nations join in the BRICS, Xi jinping convey wishes to PM Modi for Chandrayaan 3 success!!

சீன அதிபர் ஜி ஜின்பிங்: 
பிரிக்ஸ் கூட்டத்தில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், “பிரிக்ஸ் உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்திய தென்னாப்பிரிக்க அதிபருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதலாக, நாங்கள் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் தீர்மானத்தை அங்கீகரித்துள்ளோம். இந்த உறுப்பினர் விரிவாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்'' என்றார். மேலும், சந்திரயான் 3 விண்கலம் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் பிரிக்ஸ் அமைப்பில் தனது நாட்டைச் சேர்த்தற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைவர் முகமது பின் சயீத் வியாழனன்று தனது நாட்டை பிரிக்ஸ் உறுப்பினராக சேர்த்தமைக்கு பாராட்டுவதாக தெரிவித்தார். மேலும் இந்தக் குழுவை முக்கியமான முழு என்று குறிப்பிட்டார். ''உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகள், மக்களின் செழிப்பு, கண்ணியம் மற்றும் நன்மைக்கான அர்ப்பணிப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம்" என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்தியாவுக்கு சிவிங்கி புலிகளை வழங்குவதில் மகிழ்ச்சி: தென் ஆப்பிரிக்க அதிபர்!

உள்ளூர் நாணயங்கள், பணம் செலுத்தும் கருவிகள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்குமாறு பிரிக்ஸ் தலைவர்கள் தங்கள் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராம்போசா தெரிவித்தார். 

வங்கதேசம் பிரதமர் ஷேக் ஹசினாவும் நேற்று இரவு நடந்த விருந்தின்போது பிரதமர் மோடிக்கு சந்திரயான் 3 வெற்றிக்காக பாராட்டு தெரிவித்து இருந்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios