மக்கள் தலையில் கடன் சுமையை ஏற்றிய வளர்ந்த நாடுகள்; இந்தியா எங்க இருக்குன்னு பாருங்க, கொண்டாடுங்க!!

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விவரங்களின்படி சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தனிநபர் கடன் உலகளாவிய பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அரசாங்க கடன் சுமை ஒரு சீன நபருக்கு இருப்பதை விட 10 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

Singapore US with highest per capita debt in the world; Indians have less debt

தனிநபர் கடனில் அமெரிக்க மக்களின் கடன்தான் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதல் 50 இடங்களில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, தனிநபர் கடனைப் பொறுத்தவரை சிங்கப்பூர் முதல் இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவின் ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு சிங்கப்பூர் தனிநபரின் கடன் பங்கு 117,400 டாலராக இருக்கிறது. 

சிங்கப்பூருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் அமெரிக்கா வருகிறது. இங்கு தனிநபர் கடன் பங்கு 93,000 டாலராக இருக்கிறது. ஜூன் மாதத்தில், நாட்டின் கடன் முதன் முறையாக 32 ட்ரில்லியன் டாலரைத் தாண்டியது. அதிபர் ஜோ பைடனின் நிர்வாகமும், குடியரசுக் கட்சியினரும் மே மாத இறுதியில் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருந்தனர். அதன்பிறகு தனிநபர் கடன் சுமையும் அதிகரித்துள்ளது. 

எகிறி அடிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குகள்; 5 ஆண்டுகளில் 394.72% மதிப்பு உயர்வு!!

அமெரிக்காவுக்கு  அடுத்ததாக ஜப்பான் 88,400 டாலருடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. கனடா 58,900 டாலர்களுடன் நான்காவது இடத்திலும், பெல்ஜியம் 52,600 டாலர்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.  ஐஸ்லாந்து (51,200 டாலர்), இத்தாலி (49,200 டாலர்), பிரான்ஸ் (47,100 டாலர்), அயர்லாந்து (47,100 டாலர்), மற்றும் பிரிட்டன் (46,600 டாலர்) என முதல் 10 இடங்களில் உள்ளன.

நார்வே (42,100 டாலர்), ஆஸ்திரேலியா (36,500 டாலர்), சுவிட்சர்லாந்து (36,200 டாலர்) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அதிகார மையமான ஜெர்மனி 32,600 டாலர் என முதல் 30 நாடுகளில் உள்ளன. முதல் முப்பது இடங்களில் இருக்கும் நாடுகளில் பெரும்பாலானவை வளர்ந்த நாடுகள் ஆகும்.  

ரஷ்யா கடந்தாண்டு 94 வது இடத்தில் இருந்தது. இது தற்போது தனிநபர் கடனில் 2,980 டாலரைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், ரஷ்ய நிதி அமைச்சகம், ஃபெடரல் ஸ்டேட் ஸ்டாடிஸ்டிக்ஸ் சர்வீஸ் ஆகியவற்றின் கணக்கின்படி ரஷ்யாவின் தனிநபர் கடன் சுமார் 2,200 டாலராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 டிவிஎஸ் எமரால்டு புதிய சாதனை! துவக்க நாளில் ரூ.438 கோடிக்கு வீடுகள் விற்பனை!

வளரும் பொருளாதார நாடுகளில் பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் பிரேசில், ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் சீனாவின் தனிநபர் கடன் தான் அதிகமாக இருக்கிறது. சீன நாட்டின் தனிநபர் கடன் 9,900 டாலராக அதிகரித்து உலக பட்டியலில் 47வது இடத்தில் உள்ளது. பிரேசில் 7,700 டாலர்களுடன் 57வது இடத்தைப் பிடித்துள்ளது. தனிநபர் கடன் 4,700 டாலராக இருந்த தென்னாப்பிரிக்கா 75வது இடத்திலும், இந்தியா 2,000 டாலருடன் 112வது இடத்திலும் உள்ளன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios