சிங்கப்பூரில் அலுவலக மொழியாக தமிழ் நீடிக்கும் - அரசு உறுதி செய்தது

Singapore official language tamil
Singapore official language tamil


சிங்கப்பூரில் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டு அரசு  தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் 4 அலுவல் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. மேலும் அங்குள்ள பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் இந்த அலுவல் மொழி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உறுதிபூண்டுள்ளதாக வர்த்தக உறவுகள் மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் (பொறுப்பு) ஈஸ்வரன் கூறியுள்ளார். 

Singapore official language tamil

அதில் அமைச்சர் கூறுகையில், ‘தமிழ் மொழி தொடர்பான அரசின் கொள்கை முடிவும், ஆதரவும் தெளிவாக உள்ளது. மற்றபடி ஒவ்வொரு நாளும் தமிழை பேசி அதை வாழும் மொழியாக மாற்றுவது அனைத்தும் அந்த சமூகம், குறிப்பாக இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது’ என்றார். மேலும் தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்ப்பதற்கு, தமிழ் மொழி திருவிழா நடத்துவது சிறந்த வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios