உலகில் வாழத் தகுந்த நகரங்கள் டாப் 20ல் சிங்கப்பூர்! சென்னை, பெங்களூருக்கு எந்த இடம் தெரியுமா?
உலகில் வாழத் தகுந்த நகருக்கான பட்டியலில் முதல் 10 இடங்களில் சிங்கப்பூர் இடம்பிடிதுத்துள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது புள்ளி விபர அறிக்கையில் தெரியவந்துள்ளது.
APAC என்ற பொருளாதார புலனாய்வு அமைப்பு உலகம் முழுவதும் மொத்தம் 173 நகரங்களில் மக்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆய்வு செய்து இந்த 2023 ஆண்டுக்கான உலகில் வாழத் தகுதியான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில், நகரத்தின் உள்கட்டமைப்பு வசதி, சுகாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் மதிப்பிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் கோவிட் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்ததால் பல்வேறு நகரங்கள் எதிரபாரதவிமாக தரவரிசையில் மாற்றம் கண்டன. கொரோன முடிந்த காலகட்டமான இந்த ஆண்டும் தரவரிசையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நகரங்களில், எட்டு நகரங்கள் மிக அதிகமாக முன்னேறியுள்ளன. நியூசிலாந்தின் வெலிங்டன் 35 இடங்கள் முன்னேறி 23வது இடத்தையும், ஆக்லாந்து 25 இடங்கள் முன்னேறி 10வது இடத்தையும் பிடித்தது. வியட்நாமின் ஹனோய் 20 இடங்கள் முன்னேறி 129வது இடத்தையும், மலேசியாவின் கோலாலம்பூர் 19 இடங்கள் முன்னேறியுள்ளது.
சிங்கப்பூர் நிறுவனங்களை ஏமாற்ற முயற்சி.. பலே வேலை பார்த்த இந்தியர் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?
இந்திய நகரங்களான, புது டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் ஆகியவை ஆசிய-பசிபிக் நகரங்களில் 45 மற்றும் 50 இடங்களுக்கு இடையே தரவரிசையில் உள்ளன.
மிக்குறைந்த புள்ளிகளை பெற்ற நகரங்களின் அடிப்படையில், டமாஸ்கஸ் 30.7 புள்ளிகளை பெற்று 173வது இடத்தையும், 40.1 புள்ளிகள் பெற்று திரிபோலி 172வது இடத்தை பிடித்துள்ளது.
சிங்கப்பூர் டிராவல் எக்ஸ்போ 2023!, பயணத் தேர்வில் ஐரோப்பிய நாடுகள் முதலிடம்!