டெக்னாலஜியில் உச்சம் தொட்ட சிங்கப்பூரை பிரமிக்க வைத்த இந்தியா.. சந்திரயான் 3 - வாழ்த்து சொன்ன சிங்கை அமைச்சர்!
நிலவின் தெற்கு பகுதியில் முதல் முறையாக தனது விண்கலத்தை நிலை நிறுத்தி உள்ள இந்தியாவிற்கு, உலக அளவில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அறிவியலில் மாபெரும் வளர்ச்சி பெற்று உள்ள சிங்கப்பூர் அரசும், இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 திட்டம் இறுதி நிமிடத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து, பல விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் தற்பொழுது சந்திரயான் 3திட்டம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
நிலவில் கால் பதித்துள்ள நான்காவது நாடு என்கின்ற பெருமையையும், முதல் முறையாக நிலவின் தென் துருவத்தில் தனது விண்கலத்தை இறக்கி ஆய்வு செய்கின்ற நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளது இந்தியா என்பது இந்தியர்கள் அனைவரும் பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.
ரஷ்ய அதிபர் புட்டின் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தற்பொழுது இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும், தங்களுடைய மகிழ்ச்சிகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்பொழுது சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, நாளை கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
BRICS மாநாட்டிற்கு பிறகு கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர்.. அடுத்த விசிட் ISROக்கு தான் - முழு விவரம்!
பிறகு அங்கிருந்து உடனடியாக ஆகஸ்ட் 26ம் தேதி கிரீசிலிருந்து நேரடியாக பெங்களூரு சென்று அங்கு விஞ்ஞானிகளை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளார். உலகமே இந்த சிறந்த அறிவியல் சாதனையை பாராட்டி வரும் நிலையில், டெக்னாலஜியில் பல மையில் கற்களை கடந்து பயணித்து வரும் சிங்கப்பூர் அரசும் தற்பொழுது இந்தியாவிற்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் அரசின் வெளிவரவுத்துறை அமைச்சர் திரு. ஜார்ஜ் ஏயோ வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிவிட்டது, வாழ்த்துக்கள் இந்தியா என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.
சந்திரயான் 3 வெற்றியில் கோவைக்கு கூடுதல் பெருமை.. ஸ்பெஷலான தருணம்.. ஏன் தெரியுமா?