கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ஆரோக்கியமற்றதாக மாறிய காற்று - சிங்கப்பூரர்களே இனி அதிக கவனம் தேவை!
Singapore : இன்று அக்டோபர் 7, 2023 அன்று காலை, சிங்கப்பூரின் சில பகுதிகளில் காற்றின் தரம் "ஆரோக்கியமற்ற" வரம்பிற்குள் நுழைந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019க்குப் பிறகு இப்படி காற்று தரமற்ற முறைக்கு செல்வது இதுவே முதல் முறை. சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமையின் (NEA) அறிவிப்பின்படி இந்த நிலை இவ்வாறு இறுதி வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது.
சிங்கப்பூரில் காற்றின் தரம் எப்படி உள்ளது?
NEAன் haze.gov.sg இணையதளத்தின்படி, அது சிங்கப்பூரில் பதிவாகும் PM 2.5 நிலைகளை ஒரு மணி நேராதிக்கிற்கு ஒருமுறை கணக்கிடுகிறது, அதே போல மாசு தரக் குறியீடு (PSI) நிலைகளைக் ஒரு நாளைக்கு ஒரு முறை கண்காணிக்கிறது. இவை சிங்கப்பூரின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதியில் காற்றின் தரம் "ஆரோக்கியமற்ற" வரம்பிற்குள் உள்ளது என்று NEA தெரிவித்துள்ளது.
PSI மற்றும் PM2.5 என்றால் என்ன?
PM2.5 என்பது 2.5 மைக்ரான் அல்லது அதற்கும் குறைவான அளவில், காற்றில் பரவும் நுண்ணிய துகள்களின் அளவை அளவிடுகிறது. (Inhalable Particulate Matter) PM2.5ன் ஆரோக்கியமற்ற அளவுகள் இதய நோய், ஆஸ்துமா மற்றும் பிற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல PSI என்பது Pollutant Standards Index (மாசு தரக் குறியீடு) என்று அழைக்கப்படுகிறது PSI ஆனது 24 மணி நேர சராசரியான PM2.5ன் செறிவு நிலைகளின் அடிப்படையில் மற்ற மாசுபடுத்திகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
சிங்கப்பூரின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி "ஆரோக்கியமற்ற" வரம்பில் உள்ளது
தற்போது உள்ள நிலவரப்படு, சிங்கப்பூரின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. சிங்கப்பூரின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் 24 மணிநேர PSI அளவு முறையே 102 மற்றும் 111 ஆக உள்ளது. இதனால், அங்கு காற்றின் தரம் "ஆரோக்கியமற்றது" என்று கருதப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மறுபுறம், சிங்கப்பூரின் தெற்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் காற்றின் தரம் "மிதமான" வரம்பிற்குள் உள்ளது, அங்கு 24 மணிநேர PSI அளவு முறையே 87, 68 மற்றும் 62 என்ற அளவில் உள்ளது. 24 மணிநேர PSI அளவு என்பது 51 முதல் 100க்குள் இருக்கும்வரை, காற்றின் தரம் மிதமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமத்ரா தீவுகளில் உள்ள சிறு சிறு எரிமலை வெடிப்புகள் மூலம் தான் அதிக புகை மண்டலம் உருவாகி, தற்போது சிங்கப்பூரில் காற்றின் தரத்தை குறைக்க வழிவகுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே மோதல்; மீண்டும் ஒரு யுத்தம்; இந்தியர்களுக்கு அறிவுரை!!