Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரில் சோகம்.. எவ்வளவு போராடியும் காப்பாற்ற முடியவில்லை - கோவிட் 19.. உயிரிழந்த 13 மாத குழந்தை!

Singapore News : உலக அளவில் கோர தாண்டவம் ஆடிய பெருந்தொற்று நோய்க்கு உலக அளவில் பல லட்சம் பேர் இறந்தனர். அந்த வகையில் கடந்த மாதம் அக்டோபர் 12, 2023 அன்று சிங்கப்பூரில் 13 மாத ஆண் குழந்தை பெருந்தொற்று பாதிப்பால் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

singapore 13 month old boy baby died of covid 19 first under 12 age death in 2023 ans
Author
First Published Nov 26, 2023, 1:53 PM IST | Last Updated Nov 26, 2023, 1:53 PM IST

இந்நிலையில் சிங்கப்பூரில் பெருந்தொற்றால் 12 வயது கீழ் உள்ளவர்களின் இந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட முதல் மரணமாக அந்த குழந்தையின் மரணம் மாறியுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் அளித்த தகவலின்படி, கோவிட்-19 க்கு அக்டோபர் 10, 2023 அன்று நேர்மறை சோதனை செய்யப்பட்டு, அன்றைய தினமே அந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த 13 மாத ஆண் குழந்தைக்கு "கோவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை" மற்றும் நோய்த்தொற்றுக்கு முன்னர் பிறப்பில் இருந்தே "குறிப்பிடத்தக்க மருத்துவ ரீதியான உடல் உபாதை" இருந்ததாக சுகாதார அமைச்சகம் (MOH) மேற்கோள் காட்டியுள்ளது. அவரது இறப்புக்கான காரணம் கடுமையான கோவிட்-19 தொற்று என்றும், அவருக்கு ஏற்கனவே இருந்த உடல் உபாதையும் காரணம் என்றும் MOH மேலும் கூறியது.

ஆஸி.யில் இந்திய மாணவர் மீது கொடூரத் தாக்குதல்... கோமாவில் முடிந்த மூளை ஆபரேஷன்!

பெரியவர்களை விட குழந்தைகளில் கோவிட்-19ன் ஆபத்து குறைவாக இருந்தாலும், குறிப்பாக குழந்தைக்கு தடுப்பூசி போடப்படாத மற்றும் அடிப்படை நிலைமைகள் இருந்தால் "கடுமையான விளைவுகள்" ஏற்படலாம் என்று MOH எடுத்துரைத்தது. எனவே ஆறு மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து நபர்களும் புதுப்பிக்கப்பட்ட Pfizer-BioNTech/Comirnaty அல்லது Moderna/Spikevax Covid-19 தடுப்பூசிகளின் கூடுதல் டோஸை ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள். 

விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் சிறுவன்: குடும்பத்தை கண்டதும் துள்ளிக் குதித்து ஓடிய நெகிழ்ச்சி!

முன்னதாக 2022 ஆம் ஆண்டில், கோவிட்-19 நோயால் 12 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் இறப்புகள் பதிவாகியிருந்தன. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட்-19லிருந்து குழந்தைகளிடையே இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios