ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி... அஷ்ரப் கானியின் சகோதரர் செய்த துரோகம்... தலிபான்களுடன் கைகோர்ப்பு..!
குச்சிஸ் இன கவுன்சில் தலைவராக இருந்த ஹஷ்மத் கனி அக்மத்சாய், தாலிபான் தலைவர் கலீல் உர் ரெஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மக்மூத் ஸாகிர் முன்னிலையில் தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் சகோதரர், ஹஷ்மத் கானி அகமதுசாய், தலிபான்களுக்கு ஆதரவளித்து நேரில் சந்தித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
குச்சிஸ் இன கவுன்சில் தலைவராக இருந்த ஹஷ்மத் கனி அக்மத்சாய், தாலிபான் தலைவர் கலீல் உர் ரெஹ்மான் மற்றும் மதத் தலைவர் முஃப்தி மக்மூத் ஸாகிர் முன்னிலையில் தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் அதிபரான அஷ்ரப் கனி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலிபான்கள் சுற்றி வளைத்த பின்னர், தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து அஷ்ரப் கானி கூறுகையில், ‘’காபூலில் இருந்து 'இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக' தப்பிச் சென்றதாகக் கூறினார். அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து '4 கார்கள் நிறைய பணத்தை நிரப்பிக்கொண்டு ஹெலிகாப்டரில் தப்பியதாக கூறப்பட்டது.
ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்த அஷ்ரப் கனி, "நான் நிறைய பணம் கொடுத்து விட்டு வந்த வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. அவை பொய் மாநிலத் தலைவராக எனக்கு உடனடி அச்சுறுத்தல் இருப்பதால் நான் வெளியேற வேண்டும்’’ எனத் தெரிவித்தார். இந்நிலையில் தனது சகோதரரே தாலிபான்களுடன் இணைந்த தகவல் அறிந்து அஷ்ரப் கனி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால்,அவர் மனவேதனை அடைந்துள்ளதாகவும் கூறாப்படுகிறது.