பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் இலங்கை குண்டு வெடிப்பில் மரணம் ! வெளியான அதிர்ச்சி தகவல் !!

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் ஜயான் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  ஜயானின் பெற்றோர் பலத்த காயங்களுடன் கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Sheke Haseena grandson dead in bonb blast

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது நெருங்கிய உறவினரான ஷேக் சலீம் வங்க தேச எம்.பி.யாக உள்ளார். இவர் ஷேக் ஹசினாவுக்கு மகன் முறை ஆவார்.  தற்போது ஷேக் சலீமின் மகள் , மருமகன்  மொசுல் ஹக் மற்றும் இரண்டு பேரக் குழந்தைகள் இலங்கையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஈஸ்டர் தினத்தன்று மொசுல் ஹக்  தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், கொழும்புவில் உள்ள ஷங்கிரி லா என்னும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தனர்.

Sheke Haseena grandson dead in bonb blast

அப்போது அங்கு திடீரென குண்டு வெடித்தது. அதில் ஷேக் ஹசீனாவின் பேரன்  8 வயது சிறுவன் ஜயான் சௌத்திரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜயானின் பெற்றோர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் கொழும்புவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Sheke Haseena grandson dead in bonb blast

இந்த விபத்து குறித்து புரூனே நாட்டுக்கு சென்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது பேரனின் உடல் மற்றும் படுகாயமடைந்த பெற்றோர்களை வங்க தேசத்துக்கு அழைத்துவர உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios