சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மயான வளாகத்தில் நல்லடக்கம்

எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் ஏராளமான கண்ணீர்  விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Shantan body was laid to rest at the Vadamarachi Ellangakulam crematorium sgb

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து, 2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சில நாட்களுக்கு முன் திருச்சியில் உயிரிழந்தார். அவரது உடல் இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டு வடமராட்சி எள்ளங்குளம் மயான வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறைத்  தண்டனை அனுபவித்து அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன். கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இவரது உடல் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில். அங்கு பல்வேறு கட்ட அனுமதிக்கு பிறகு வவுனியா, மாங்குளம் மற்றும் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு சாந்தன் உடல் வைக்கப்பட்டது.

சாந்தன் உயிரோடு இலங்கைக்கு வருவாரென எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென உயிரிழந்த நிலையில் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு  நேற்று பிற்பகல்   மக்கள் அஞ்சலிக்காக குமரப்பா நினைவு சதுக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்

இறுதியாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் ஏராளமான கண்ணீர்  விபூதி போடப்பட்டு சாந்தனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios