சீனாவுக்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்த செந்தில் தொண்டமான்.! தமிழர்கள் வரவேற்பு

சீனர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சீனாவின் யுனான் மாகாண ஆளுநர் வாங் யுபோவிற்கு செந்தில் தொண்டமான் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.  

Senthil Thondaman Thiruvalluvar statue presented to Wang Yubo Governor of Yunnan Province China

இலங்கை பிரதமர் சீனா பயணம்

இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையில் சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கையின் உயர்மட்ட குழுவினர்களுடன், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநரும், தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சீனாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நல்லுறவு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.  

Senthil Thondaman Thiruvalluvar statue presented to Wang Yubo Governor of Yunnan Province China

அப்போது தேயிலை உற்பத்தியில் சீனா மேற்கொள்ளும் அதி தொழில்நுட்பத்தை இலங்கையில் பயன்படுத்தும் விதம் குறித்து இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவுடன் இணைந்து  செந்தில் தொண்டமான் பார்வையிட்டார். இதனையடுத்து இலங்கையில் சீனர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக  யுனான் மாகாண ஆளுநர் வாங் யுபோவிற்கு  செந்தில் தொண்டமான் திருக்குறளை எழுதிய  திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.  

இந்த சம்பவம் இலங்கை தமிழர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு தமிழர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எங்கு சென்றாலும் தமிழர்களுடைய அடையாளத்தை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்பதற்கு இது ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ளதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios