Asianet News TamilAsianet News Tamil

ராணி எலிசபெத் எதற்காக எப்போதும் ஹேண்ட்பேக் அணிந்து இருப்பார்; மறைந்து இருக்கும் ரகசியம்!!

மறைந்த ராணி எலிசபெத் பற்றி பலருக்கும் பல ஸ்வராஸ்யமான தகவல்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாட்டின் ராணியாக இருந்து கொண்டு அவர் தினமும் பேக் வைத்துக் கொண்டு இருப்பது எதற்கு என்ற கேள்வி எழக்கூடும். இதில்தான் ரகசியமே அடங்கி இருக்கிறது.

Secrets of Queen Elizabeth handbag
Author
First Published Sep 9, 2022, 6:20 PM IST

இந்த செய்தியில் ராணி எலிசபெத் பற்றி அறியாத தகவல்களைப் பார்க்கலாம்:

* பொதுவாக நாட்டின் தலைவராக இருக்கும்போது மற்ற நாடுகளில் இருந்து, பரிசு பொருட்கள் கிடைப்பது வாடிக்கைதான். இதேபோன்றுதான் ராணி எலிசபெத்துக்கும் குதிரைகள், பசுக்கள், யானைகள், கங்காரு, வாத்து, முதலைகள் உட்பட பரிசாக கிடைத்துள்ளது. இவற்றை அடிக்கடி லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு பரிசாக கொடுத்துள்ளார். 

* இவர் எதற்காக சிறிய பேக் ஒன்று கையில் எப்போதும் தொங்கவிட்டுக் கொண்டு இருக்கிறார் என்ற சந்தேகம் பலருக்கும் வந்து இருக்கும். அதுவும் அவர் உடுத்தும் ஆடைக்கு மேட்சாக அணிந்து இருப்பார். இவர் கைதட்டினால் ஓடி வருவதற்கு பல வேலையாட்கள் உள்ளனர். பணம் கொடுப்பதற்கு சிறப்பு அலுவலர் இருப்பார். எதற்கு பேக் என்றெல்லாம் எண்ணத் தோன்றும். 

* இந்த பேக் மூலம் தனது பணியாட்களுக்கு சமிஞை கொடுப்பாராம். அவருக்கு தேவையான முக்கியமான பொருட்களும் வைத்து இருப்பாராம். ராணி எலிசபெத் தனது பேக்கை மேசையில் வைத்தால், ஐந்து நிமிடங்களில் அவர் வெளியேற விரும்புகிறார் என்று அர்த்தமாம். அவர் தனது பேக்கை தரையில் வைத்தால், நடைபெறும் உரையாடலை ரசிக்கவில்லை என்று அர்த்தமாம். அவரை உடனே அந்த இடத்தில் மீட்க வேண்டும் என்று அர்த்தமாம். 

Secrets of Queen Elizabeth handbag

* தினமும் காலை அவரது அறைக்கு வெளியே சுமார் 15 நிமிடம் வாசிக்கப்படும் பேண்டு வாத்தியத்தை ரசித்து கேட்பாராம். 

500 மில்லியன் டாலர் சொத்து.. பாஸ்போர்ட் இல்லாமலே வெளிநாடு போகலாம் - மன்னர் சார்லசுக்கு இவ்வளவு வசதிகளா ?

* இவருக்கு "லிலிபெட்" மற்றும் "முட்டைக்கோஸ்" என்ற புனைப்பெயர்களும் உண்டு. இவர் குழந்தையாக இருக்கும்போது, இவரது பெயரை உச்சரிக்க தெரியாமல், ஆறாம் கிங் ஜார்ஜ் தனது மகள்களை, "லிலிபெட் என் பெருமை, மார்கரெட் என் மகிழ்ச்சி'' என அழைத்து வந்ததாக கூறப்படும். இவரது கணவரும், இளவரசருமாக இருந்த பிலிப் இவரை முட்டைகோஸ் என்றே அழைத்து வந்துள்ளார்.

Secrets of Queen Elizabeth handbag

* பிரிட்டன் ராஜபரம்பரையில் முதல் பெண்மணியாக ராணி எலிசபெத் தான் ராணுவத்தில் முழு நேர பணியாளராக சேர்ந்து பணியாற்றினார். இவரை அடுத்து ஹாரி பணியாற்றினார்.

* இளவரசர் பிலிப்பை தனது 8 வயதில் ராணி எலிசபெத் சந்தித்துள்ளார். இருப்பினும் இதைத் தொடர்ந்து குழந்தைகளாக இருந்தபோது, இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்து வந்துள்ளனர். ராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் பிலிப் 1934 ஆம் ஆண்டு, கிரேக்க இளவரசி மரினா மற்றும் கென்ட் டியூக் இளவரசர் ஜார்ஜ் ஆகியோரின் திருமணத்தில் அதிகாரப்பூர்வமாக சந்தித்துக் கொண்டனராம். 

Secrets of Queen Elizabeth handbag

* ராணி எலிசபெத்துக்கு நாய்கள் என்றாலே பிரியம் அதிகம்.  30 க்கும் மேற்பட்ட நாய்களை சொந்தமாக வளர்த்து வந்தார்.  அவரே மெனக்கெட்டு அவற்றுக்கான தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வாராம். 

* அவருக்கு ஒரு தனிப்பட்ட கவிஞர் இருக்கிறார். பிரிட்டன் அரசாங்கத்தால் கவுரப்பதவியாக இந்த கவிஞர் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்.   

* பிரான்ஸ் மொழியை சரளமாக பேசக் கூடியவர் ராணி இரண்டாம் எலிசபெத். எப்போதெல்லாம் பிரான்ஸ் செல்கிறாரோ அப்போது பிரான்ஸ் மொழியில் பேசி அங்கிருக்கும் மக்களை ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளார்.

* ஆண்டுக்கு 70,000 கடிதங்கள் ராணி எலிசபெத்துக்கு வருமாம். ராணிக்கு ஒரு நாளைக்கு சுமார் 200-300 கடிதங்கள் வரும் என்று தகவல்கள் கூறுகின்றன. சில கடிதங்களை அவரே படிபாராம். சிலவற்றை தேர்வு செய்து, ஊழியர்களிடம் பதில் அளிக்க வேண்டும் என ஒப்படைத்து விடுவாராம். மக்களிடம் பெறப்படும் கடிதங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு நேரத்தை செலவிடுவாராம். 

* ஆண்டுக்கு இரண்டு முறை பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவர் ஏப்ரல் 21, 1926 ஆம் ஆண்டில் பிறந்தாலும், இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இரண்டு அங்கீகரிக்கப்பட்ட பிறந்த நாள்கள் உள்ளன. அவர் பிறந்த நாளில் ஒரு முறையும், அதிகாரப்பூர்வமாக இரண்டாவது முறையும் பிறந்த நாளை கொண்டாடி வந்தார். இந்த பாரம்பரியம் 1748 ஆம் ஆண்டில் இரண்டாம் ஜார்ஜ் மன்னர் இருக்கும்போது துவங்கப்பட்டது. 

Kohinoor Crown : ராணி எலிசபெத்தின் வைர கிரீடத்தை அணியப் போகிறவர் யார்?

Follow Us:
Download App:
  • android
  • ios