ஆஸ்திரேலியா சென்ற Scoot விமானம்.. நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் - சட்டென செயல்பட்ட சிங்கப்பூர் அதிகாரிகள்!
Singapore : ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஸ்கூட் (Scoot) விமானம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு பெரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இந்த பதிவில் காணலாம்.
சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஸ்கூட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, சிங்கப்பூர் குடியரசின் விமானப்படை (RSAF) விமானம் மூலம் பாதுகாப்பாக அந்த Scoot விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிடைத்திருக்கும் தகவலின்படி TR16 என்ற அந்த விமானம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் இருந்து இன்று அக்டோபர் 12ஆம் தேதி மாலை 4:11 மணிக்கு ஆஸ்திரேலியா புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு சுமார் 1 மணிநேரம் ஆனா நிலையில் தான் அந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிங்கப்பூர் விமானநிலைய அதிகாரிகள், அந்த விமானத்தை பாதுகாப்பாக சிங்கப்பூருக்கு திருப்பி கொண்டுவந்துள்ளனர்.
குழந்தைகளையும் விடாது.. உடனே போரை நிறுத்துங்கள் -மலாலா வேண்டுகோள்!
பெர்த் செல்லும் விமானத்தை மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல RSAF (Republic of Singapore Air Force) செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. Flightradar24 இன் தரவுபடி, சிங்கப்பூருக்குத் திரும்புவதற்கு முன் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் TR16 பல முறை சுற்றியதை நம்மால் புகைப்படங்களில் பார்க்கமுடிகிறது. இந்தோனேசியாவின் பாங்கா-பெலிதுங் தீவுகள் மீது பறந்துகொண்டிருந்த நிலையில் அது சிங்கப்பூர் திரும்பியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னதாக விமானம் சாங்கி விமான நிலையத்தில் மாலை 6:27 மணிக்கு தரையிறங்கியது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள scoot நிறுவனம் "இது ஒரு பாதுகாப்பு சம்மந்தமான விஷயமாக இருப்பதால், எங்களால் கூடுதல் விவரங்களை வழங்க முடியாமல் போனதற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பயணிகளுக்கு இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள Scoot விமான சேவை நிறுவனம் இனி மிகுந்த விழிப்புடன் செயல்படுவோம் என்றும் தெரிவித்துள்ளது.