375 வருடமாக கடலுக்கு அடியில் காணாமல் போயிருந்த 8வது கண்டம் கண்டுபிடிப்பு!
புதிய கண்டம் 94 சதவீதம் நீருக்கடியில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஒருசில தீவுகள் இந்தக் கண்டத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டுள்ளது.
ஏறக்குறைய 375 ஆண்டுகளுக்குப் பிறகு, மறைந்திருந்த ஒரு கண்டத்தைப் புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புவியியலாளர்கள் மற்றும் நில அதிர்வு நிபுணர்களின் சிறிய குழு ஜிலேண்டிலா (Zealandia) அல்லது Te Riu-a-Maui என்று அழைக்கப்படும் புதிய வரைபடத்தை உருவாக்கியுள்ளது.
Phys.org இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, கடலில் இருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் அதைக் கண்டுபிடித்தனர். இந்த ஆராய்ச்சியின் விவரங்கள் டெக்டோனிக்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜிலேண்டியா 49 லட்சம் சதுர கிமீ பரப்பளவு கொண்ட ஒரு பரந்து விரிந்த கண்டம் ஆகும். இது மடகாஸ்கரைவிட ஆறு மடங்கு பெரியது. இதன் அடிப்படையில் பூமியில் 8 கண்டங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. புதிய கண்டம் 94 சதவீதம் நீருக்கடியில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஒருசில தீவுகள் இந்தக் கண்டத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டுள்ளது.
கையால் தொடமுடியாத அளவு சூடேறும் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள்: கேஜெட் பிரியர்களுக்கு ஏமாற்றம்!
ஜிலேண்டியா பற்றிய அறிந்துகொள்வது எப்போதுமே கடினமாகவே இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். விஞ்ஞானிகள் இப்போது கடல் படுக்கையில் இருந்து எடுக்கப்பட்ட பாறைகள் மற்றும் வண்டல் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ஆய்வில் உருவாக்கப்பட்டுள்ள வரைபடம் இது நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் காம்ப்பெல் பீடபூமிக்கு அருகில் ஒரு துணை மண்டலம் இருப்பதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த வரைபடம் மற்ற முக்கிய புவியியல் அம்சங்களையும் காட்டுகிறது.
ஜிலேண்டியா முதலில் கோண்ட்வானாவின் பண்டைய சூப்பர் கண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சுமார் 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு அரைக்கோளத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் ஒன்றாக இணைத்து ஜிலேண்டியா உருவானது.
BMW iX1: புதிய மின்சார காரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பி.எம்.டபிள்யூ!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D