Asianet News TamilAsianet News Tamil

திருப்பியடிச்சா தாக்கு பிடிக்குமா பாக்..? இந்தியாகிட்ட லைட்டா வாலாட்டும் பின்னணி..!

 பாகிஸ்தான் எல்லை பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கும் பாகிஸ்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது 9 வான்  வழித்தடங்களில் மூன்றை மூடிவிட்ட பாகிஸ்தான், இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்லும்படியும்  உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் பாகிஸ்தான் தலைநகர் பகுதியில் பறப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

Samjhauta Express service...Pakistan suspends
Author
Islamabad, First Published Aug 8, 2019, 6:00 PM IST

லாகூர் - டெல்லி இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா விரைவு ரயில் சேவையை நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானும் என்னதான் எதிரி நாடுகாளக இருந்தாலும் இருநாடுகளுக்கும் இடையே நட்பு பாலமாக இருந்தது சம்ஜவுதா விரைவு ரயில் ஆகும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது பாகிஸ்தான் சென்றவர்களின் பெரும்பாலானவர்களின்  உறவினர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர். நாடு பிரிந்தாலும் உறவுகளை பிரிய முடியாமல் தவித்தவர்களுக்கு வரபிரசாதமாக வந்தது தான் சம்ஜவுதா ரயில், பிறிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அன்பு பாலம் சம்ஜவுதா என்றால் மிகையாகாது.  Samjhauta Express service...Pakistan suspends

இந்தியா - பாகிஸ்தான் இடையே நட்பு பாராட்டும் பாலம் என்றே இரு நாட்டு மக்களாலும் சம்ஜவுதா வர்ணிக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த ரயில் சேவையை முழுவதுமாக நிறுத்துவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையை காரணம் காட்டி சம்ஜவுதா விரைவு ரயிலை பாகிஸ்தான் எல்லையான அட்டாரியில் நிறுத்தி வைத்துள்ளது பாகிஸ்தான். இந்தியா செல்ல டிக்கெட் வாங்கியவர்கள் தங்களது டிக்கெட்டுகளுடன் வந்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் பாகிஸ்தான் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.Samjhauta Express service...Pakistan suspends

இதேநேரத்தில் நேற்று இரவு முதல் பாகிஸ்தான் எல்லை பரப்பில் இந்திய விமானங்கள் பறப்பதற்கும் பாகிஸ்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமது 9 வான்  வழித்தடங்களில் மூன்றை மூடிவிட்ட பாகிஸ்தான், இந்தியாவிற்கான ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்லும்படியும்  உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு விமானங்கள் பாகிஸ்தான் தலைநகர் பகுதியில் பறப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 Samjhauta Express service...Pakistan suspends

இது ஒரு புறமிருக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் எந்த திரைப்படமும் பாகிஸ்தானில் திரையிடப்போவதில்லை என்றும்  பாகிஸ்தான் பிரதமர்  அலுவலக விவகாரத்துறை அமைச்சர் பிர்தோஸ் ஆஷிக்அவன் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியா உடனான அனைத்து விதமான இராஜாங்க உறவுகளையும் முறித்துக்கொண்டுள்ள பாகிஸ்தான், இந்தியாவை சீண்டிப்பார்க்கும் வேலைகளில் இறங்கி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios