Asianet News TamilAsianet News Tamil

ரணில் விக்ரமசிங்கே அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவு... அறிவித்தார் சஜித் பிரேமதாச!!

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவு அளித்துள்ளது. 

Sajid Premadasa announced his support  to Ranil Wickremesinghe
Author
Sri Lanka, First Published May 16, 2022, 4:42 PM IST

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு எடுத்துள்ளது. நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவே ரணில் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக விளக்கம் அளித்துள்ளார். இலங்கை அரசின் பொருளாதார நலன்சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படும். ரணிலின் ஆட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளுக்கு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுக்கு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எதிராக அமைந்தால் ஆதரவு திரும்ப பெறப்படும். இலங்கை பிரதமராக ரணில் பதவியேற்ற போது சஜித் பிரேமதாச  எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது திடீரென ஆதரவு அளித்திருக்கிறார்.

Sajid Premadasa announced his support  to Ranil Wickremesinghe

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கொழும்பு முழுவதும் வன்முறை பரவியது. தொடர்ந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனிடையே, 4வது முறையாக இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி காலேவில் போராட்டம் நீடித்து வருகிறது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட பூஜ்யம் என்றாகிவிட்ட நிலையில் அதனை அதிகரிக்கும் முயற்சியில் ரணில் விக்ரமசிங்கே இறங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

Sajid Premadasa announced his support  to Ranil Wickremesinghe

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தையில் பல நாடுகள் கடன் கொடுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் அரசுக்கு சஜித் பிரேமதாச ஆதரவு தெரிவித்துள்ளார்.  முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், இலங்கை முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அதிபர் கோட்டாபயவை சந்தித்துப் பேசினார். பிரதமர் நியமனம் தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியானது. ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் பெரும்பாலானோர் விக்கிரசிங்கவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தகவல் வெளியானது. புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கக்கூடும் என இலங்கை அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில் ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதிவியேற்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios