Ukraine-Russia War: பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்... ரஷ்யா மீது உக்ரைன் பகீர் குற்றச்சாட்டு!!

உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 

russian soldiers molestation ukraine womens says ukraine

உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் ரஷ்யா கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷ்யா, தற்போது 9 ஆவது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. இருப்பினும், ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசு பதிலடி கொடுத்து தான் வருகிறது. குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது. இந்தப் போரில் உக்ரைன் நாட்டின் பொதுமக்களும், துப்பாக்கிகளை ஏந்தி ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர்.

russian soldiers molestation ukraine womens says ukraine

ரஷ்யாவின் உக்கிரமான தாக்குதலில், உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ், கெர்சன், கார்கெவ் உள்ளிட்ட நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், உக்ரைன் பெண்களை ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போருக்கு நடுவே, உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ரஷ்ய வீரர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இதுக்குறித்து பேசிய அவர், உக்ரேனிய நகரங்களில் ரஷ்ய வீரர்கள் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் போது, சர்வதேச சட்டத்தின் செயல்திறனைப் பற்றி பேசுவது நிச்சயமாக கடினம்.

russian soldiers molestation ukraine womens says ukraine

ஆனால் இறுதியில் இந்த போரை சாத்தியப்படுத்திய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை உறுதிசெய்யும் நாகரிகத்தின் ஒரே கருவி இதுதான் என்று லண்டனில் உள்ள சாதம் ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில் குலேபா தெரிவித்தார். இந்நிலையில், போருக்குப் பிறகு உக்ரைனை மீண்டும் புதுப்பிக்க உள்ளதாக, அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதி அளித்துள்ளார். உக்ரைனுக்கு எதிராக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட ரஷ்யாவே, அதற்கான நஷ்ட ஈட்டை திரும்ப கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடுமையான போருக்கு மத்தியில் ரஷ்ய வீரர்கள் மீது உக்ரைன் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios