Asianet News TamilAsianet News Tamil

Ukraine - Russia Crisis : உக்ரைன் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்? எப்படி தெரியுமா?

உக்ரைன் கணினிகளின் மென்பொருள்களை நிறுவி, ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தியதை அடுத்து திக்குமுக்காடி போன உக்ரைன், செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் இளம் பெண்களுக்கு, டேட்டிங் செயலியான Tinder மூலம் ரஷ்ய ராணுவ படைப் பிரிவினர் செய்தி அனுப்பி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Russian soldiers are chasing Ukrainian girls
Author
Russia, First Published Feb 28, 2022, 11:07 AM IST

உக்ரைன் மீதான ரஷ்ய போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனில் உள்ள அழகான பெண்களுக்கு, Tinder டேட்டிங் செயலி மூலம் ரஷ்ய ராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடந்த அந்நாட்டு அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். 5வது நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை  300க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகவும், ரஷ்ய தரப்பில் 3000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய தலைநகரங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ரஷ்யா கைப்பற்றி வரும் நிலையில் உக்ரைன் பயந்துபோய் பின்வாங்காமல் எதிர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நிதியுதவி, ஆயுதங்கள் குவிந்து வருகின்றது. 

Russian soldiers are chasing Ukrainian girls

இதனிடையே, உக்ரைன் கணினிகளின் மென்பொருள்களை நிறுவி, ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தியதை அடுத்து திக்குமுக்காடி போன உக்ரைன், செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் இளம் பெண்களுக்கு, டேட்டிங் செயலியான Tinder மூலம் ரஷ்ய ராணுவ படைப் பிரிவினர் செய்தி அனுப்பி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்த பெண் ஒருவர் இந்த தகவலை உறுதிபடுத்தி இருக்கிறார்.

Russian soldiers are chasing Ukrainian girls

துப்பாக்கிகளை ஏந்தியவாறும், படுக்கையில் போஸ் கொடுத்தவாறும் ரஷ்ய ராணுவத்தினர் படுக்கைக்கு அழைத்து செய்திகள் அனுப்புவதாக உக்ரைன் பெண் குற்றஞ்சாட்டி உள்ளார். விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்யா உலக நாடுகளின் எதிர்ப்புக்கு அஞ்சு நடுங்காமல் உக்ரைன் மீது உச்சக்கட்ட தாக்குதலை நடத்தி வரும் நேரத்தில் ராணுவத்தினரின் இந்த செயல் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios